செய்திகள் மலேசியா
தேசிய முன்னணி தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, மசீச இரண்டு தொகுதிகளில் போட்டியிடும்: வீ கா சியோங்
கோலாலம்பூர்:
கடந்த நவம்பர் 14 அன்று நடைபெறும் மலாக்கா மாநிலத் தேர்தலில் இரண்டு மாநில சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் என மசீச உறுதி செய்துள்ளது.
மசீச தலைவர் மன்றக் கூட்டத்தில் இவ்விஷயம் விவாதிக்கப்படுவதற்கு முன்பு, தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடியைச் சந்தித்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதன் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் கூறினார்.
முன்னதாக தேசிய முன்னணி வேட்பாளர் அறிவிக்கப்பட்டதிலிருந்து கவலையளிக்கும் தொகுதிப் பங்கீட்டுப் பிரச்சினை குறித்த கட்சியின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க இந்தச் சந்திப்பு மசீசவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தக் கூட்டத்திற்கு முன்பு, எழுந்த பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக, பிற்பகல் 12.30 மணிக்கு தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடியையும் நான் சந்தித்தேன்.
அவர் மசீசவின் கருத்துக்களைப் புரிந்துகொண்டு, அவற்றைக் கேட்டறிந்ததோடு, நாங்கள் தெரிவித்தவற்றையும் மதித்துள்ளார் என்று அவர் இன்று விஸ்மா மசீசவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 28, 2026, 10:50 pm
துன் மகாதீரின் உடல்நிலை சீராக இல்லை; வீட்டிற்குச் சென்று ஓய்வெடுக்குமாறு மருத்துவர் அறிவுரை: முக்ரிஸ்
October 28, 2026, 10:46 pm
ஸ்பெயினில் நடந்த ரயில் விபத்தில் மலேசியர்கள் சம்பந்தப்படவில்லை: விஸ்மா புத்ரா
October 28, 2026, 10:15 pm
16 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் வாட்ஸ்அப் பயன்படுத்துவதைத் தடை செய்யுமாறு பெற்றோர்களுக்கு வலியுறுத்தல்: ஃபஹ்மி
October 28, 2026, 5:41 pm
பாங்கி கொள்ளை சம்பவத்தில் கடத்தல் முயற்சிகள் நடைபெறவில்லை: போலிஸ் உறுதி
October 28, 2026, 5:39 pm
சிலாங்கூர் பட்டத்து இளவரசரின் உதவியாளர் என்ற பெயரில் மோசடி: சந்தேக நபர் கைது
October 28, 2026, 5:38 pm
சரவாக் சட்டமன்ற தேர்தலில் GPS கூட்டணி அனைத்து 82 இடங்களிலும் போட்டி
October 28, 2026, 3:37 pm
