நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆறாம் வகுப்பு மாணவி தொடர்பான ஆபாசப் படங்களைத் தயாரித்த தலைமை ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை, 11 பிரம்படிகள் விதிக்கப்பட்டது

புத்ராஜெயா:

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, ஆபாசப் படங்களைத் தயாரித்ததற்காகவும், ஆறாம் வகுப்பு மாணவியை உடல்ரீதியாக பாலியல் ரீதியாகத் தாக்கியதற்காகவும் ஒரு தலைமை ஆசிரியருக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 11 பிரம்படிகளும் விதித்தது.

டத்தோ முஹம்மது ராட்ஸி அப்துல் ஹமீத், டத்தோ மியோர் ஹாஷிமி அப்துல் ஹமீத் ஆகியோருடன் அமர்ந்திருந்த நீதிபதிகள் டத்தோ நூரின் பட்ரூடின் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஆபாசப் படங்களைத் தயாரித்த குற்றத்திற்காக அனுவார் கிந்தனுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிரான அவரது மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்தது.

மேலும், சம்பவம் நடந்தபோது 12 வயதாக இருந்த பாதிக்கப்பட்ட மாணவியை உடல்ரீதியாக பாலியல் ரீதியாகத் தாக்கிய குற்றச்சாட்டிலிருந்து அனூரை விடுவித்த நீதிமன்றத்தின் தீர்ப்பையும் அந்த அமர்வு ரத்து செய்தது.

பின்னர், நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவரை குற்றவாளி எனத் தீர்ப்பளித்து, அவருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மூன்று பிரம்படிகளும் விதித்தது.

ஒருமனதான தீர்ப்பை வாசித்த நீதிபதி நூரின், இரண்டு சிறைத் தண்டனைகளையும் தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். 

மேலும், 59 வயதான அனுவார் இன்று தனது சிறைத் தண்டனையைத் தொடங்குவதற்காக அவருக்குச் சிறைப் பிடியாணையையும் பிறப்பித்தார்.

முன்னதாக, அனுவார் தனது மேல்முறையீட்டின் முடிவு வரும் வரை, தண்டனையை நிறுத்திவைக்கும் உத்தரவைப் பெற்று, ஒரு ஜாமீனுடன் 14,000 ரிங்கிட் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இதற்கிடையில், சிறுமியை உடல்ரீதியாக பாலியல் வன்கொடுமை செய்தது, பாதிக்கப்பட்டவரின் காதுகளில் விழ வேண்டும் என்ற நோக்கத்தில் பாலியல் ரீதியான வார்த்தைகளைப் பேசியது ஆகிய குற்றச்சாட்டுகளிலிருந்து முறையே மூன்றாவது, நான்காவது குற்றச்சாட்டுகளிலிருந்து அனூவரை விடுவித்த முடிவை நீதிமன்றம் உறுதி செய்தது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset