நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

16 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் வாட்ஸ்அப் பயன்படுத்துவதைத் தடை செய்யுமாறு பெற்றோர்களுக்கு வலியுறுத்தல்: ஃபஹ்மி

கோலாலம்பூர்:

இணைய பகடிவதை, பொருத்தமற்ற உள்ளடக்கங்கள் பரவுதல் போன்ற அபாயங்களைக் குறைப்பதற்காக, 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம்.

தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் பெற்றோர்களுக்கு இதனை வலியுறுத்தினார்.

தங்கள் குழந்தைகள் யாருடன் தொடர்பு கொள்கிறார்கள் அல்லது அரட்டைக் குழுக்களில் என்ன உள்ளடக்கம் பகிரப்படுகிறது என்பது பெற்றோருக்குத் தெரியாது என்பதால், இந்தச் செயலியின் பயன்பாட்டில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் இலக்கவியல் செயல்பாடுகளைக் கண்காணிப்பதன் மூலமும், அறிமுகமில்லாத நபர்களுடன் தொடர்புகொள்வதிலும் சமூக ஊடகங்களில் உள்ளடக்கத்தைப் பகிர்வதிலும் உள்ள அபாயங்களை அவர்கள் புரிந்துகொள்வதை உறுதி செய்வதன் மூலமும் ஒரு பங்கை ஆற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.

குடும்ப உறுப்பினர்களிடையே தகவல் தொடர்பை எளிதாக்க வாட்ஸ்அப் பயன்படுத்தப்படலாம்.
இந்தத் தளம் இணையவழி கொடுமைப்படுத்துதலுக்கும், குழந்தைகள் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு உள்ளடக்கங்களைப் பரப்புவதற்கும் ஒரு இடமாக மாறும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset