செய்திகள் மலேசியா
பாங்கி கொள்ளை சம்பவத்தில் கடத்தல் முயற்சிகள் நடைபெறவில்லை: போலிஸ் உறுதி
காஜாங்:
ஓர் உணவக பணியாளரை உட்படுத்திய கொள்ளை சம்பவத்தில் எந்தவொரு கடத்தல் முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று காஜாங் மாவட்ட போலிஸ் தலைவர் நாஸ்ரொன் அப்துல் யூசோஃப் கூறினார்.
20 வயதுடைய ஆடவர் ஒருவரை கடத்தியதாகவும் கொள்ளை சம்பவம் நிகழ்ந்ததாகவும் தங்கள் தரப்புக்கு நேற்று காலை 5.16 மணிக்கு அழைப்பு வந்தது
கண்கள், கைகள் கட்டப்பட்ட நிலையில் ஆடவர் ஒருவர் காரின் பின்னால் அமர வைத்தது தொடர்பாக நள்ளிரவு 12.40 மணிக்கு இந்த சம்பவம் நிகழ்ந்ததாக அவர் சொன்னார்
பாதிக்கப்பட்ட நபர் நான்கு சந்தேக நபரால பலமாக தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட நபருக்கு சந்தேக நபரை முன்கூட்டியே தெரிந்திருக்கும் என்றும் அவர் தெரிவித்தார் .
குற்றவியல் சட்டம் செக்ஷன் 395இன் கீழ் இந்த சம்பவம் விசாரணை செய்யப்படுகிறது.
முன்னதாக, பாங்கி அவென்யூவில் உள்ள ஓர் உணவகத்தில் ஆடவர் ஒருவர் மீது கொள்ளை சம்பவம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலானது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 28, 2026, 5:39 pm
சிலாங்கூர் பட்டத்து இளவரசரின் உதவியாளர் என்ற பெயரில் மோசடி: சந்தேக நபர் கைது
October 28, 2026, 5:38 pm
சரவாக் சட்டமன்ற தேர்தலில் GPS கூட்டணி அனைத்து 82 இடங்களிலும் போட்டி
October 28, 2026, 3:37 pm
மலாக்கா தேர்தல் தொகுதி பங்கீடு: ம.சீ.ச அவசர கூட்டத்தை நடத்துகிறது
October 28, 2026, 2:52 pm
கூர்மையான ஆயுதத்தால் ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம்: விசாரணை அறிக்கை DPP தரப்பிடம் ஒப்படைப்பு
October 28, 2026, 12:06 pm
Waze-க்கு மாற்றாக TuJu-வை அமல்படுத்தும் விவகாரம்; திறந்த டெண்டரை செயல்படுத்த வேண்டும்: கணபதிராவ்
October 28, 2026, 12:05 pm
