நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

லா லீகா கால்பந்து போட்டி: அட்லாட்டிகோ மாட்ரிட் வெற்றி

மாட்ரிட்:

லா லீகா கால்பந்து போட்டியில் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியினர் வெற்றி பெற்றனர்.

மெட்ரோபோலிடன் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியினர் டிபார்டிவோ அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அட்லாட்டிகோ மாட்ரிட் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் டிபார்டிவோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அட்லாட்டிகோ மாட்ரிட் அணியின் வெற்றி கோலை ஆட்டத்தின் 48ஆவது நிமிடத்தில் ஜூலியன் அல்வாரேஸ் அடித்தார்.

மற்றொரு ஆட்டத்தில் வில்லாரியல் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் வெல்ன்சியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

எல்ஹி அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் ராயோ வலாகனோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset