செய்திகள் விளையாட்டு
2027 ஏ.ஃப்.சி ஆசியா கிண்ண காற்பந்து போட்டி: சவுதி அரேபியா VS பாலஸ்தீனம் தொடக்க ஆட்டம்
ரியாத்:
2027 ஆசியா கிண்ண காற்பந்து போட்டியை சவுதி அரேபியா ஏற்று நடத்துகிறது
இந்நிலையில் AFC ASIAN CUP 2027 தொடரின் காற்பந்து போட்டி அட்டவணை மற்றும் மைதானங்களின் விவரங்களை ஆசியக் கால்பந்து சம்மேளனம் AFC உறுதிப்படுத்தியுள்ளது.
இத்தொடரின் தொடக்க ஆட்டத்தில், போட்டியை நடத்தும் சவுதி அரேபியா அணி பாலஸ்தீனத்தை எதிர்கொள்கிறது.
மொத்தம் 24 ஆசிய நாடுகள் பங்கேற்கும் இந்த மதிப்புமிக்க கண்ட அளவிலான கால்பந்து திருவிழா, ஜனவரி 7-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 5ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இத்தொடரின் தொடக்கப் போட்டியும், சாம்பியனை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியும் ரியாத்தில் உள்ள புகழ்பெற்ற 'கிங் ஃபாத் ஸ்போர்ட்ஸ் சிட்டி' மைதானத்தில் நடத்தப்படவுள்ளன.
அதேவேளையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பாதுகாப்புச் சூழல் காரணமாக இப்போட்டித் தொடர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.
பிராந்திய சூழல் காரணமாக தேவைப்பட்டால், இத்தொடரை 2028-ஆம் ஆண்டிற்கு ஒத்திவைப்பதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளதாக AFC தலைவர் ஷேக் சல்மான் பின் இப்ராஹிம் அல் கலீஃபா தெரிவித்துள்ளார்.
இத்தொடரில் மொத்தம் 51 போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இதற்காகச் சவுதி அரேபியாவின் மூன்று முக்கிய நகரங்களிலுள்ள எட்டு மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
நடப்பு சாம்பியனான கத்தார் அணி ஜனவரி 11-ஆம் தேதி தாய்லாந்தை எதிர்த்துத் தனது முதல் போட்டியில் களமிறங்குகிறது. அதே நாளில் ஜப்பான் அணி இந்தோனேசியாவை எதிர்கொள்கிறது.
2034ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்துத் தொடரை நடத்துவதற்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பாக, இத்தொடரைச் சவுதி அரேபியா வெற்றிகரமாக நடத்தத் திட்டமிட்டுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 27, 2026, 10:32 am
மென்செஸ்டர் யுனைடெட் அணியின் முடிவை கேரிக் கவலையுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்
October 27, 2026, 10:31 am
உலகின் சிறந்த வீரருக்கான பலோன் டி'ஓர் விருதை ஹாரி கேய்ன் வென்றார்
October 26, 2026, 9:45 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
October 26, 2026, 9:42 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் படுதோல்வி
October 25, 2026, 9:41 am
லா லீகா கால்பந்து போட்டி: அட்லாட்டிகோ மாட்ரிட் வெற்றி
October 25, 2026, 9:39 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
October 24, 2026, 9:38 am
லியோனல் மெஸ்ஸி ஸ்பெயினின் மதிப்புமிக்க விளையாட்டு விருதைப் பெற்றார்
October 24, 2026, 9:34 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
October 23, 2026, 3:45 pm
