நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் படுதோல்வி

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில்  மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் படுதோல்வி கண்டனர்.

ஓல்டு டிராப்போர்ட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் ஏஎப்சி போர்னமௌத் அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 0-3 என்ற கோல் கணக்கில் ஏஎப்சி போர்னமௌத் அணியிடம் தோல்வி கண்டனர்.

பல முன்னணி ஆட்டக்காரர்கள் இருந்தும் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் இவ்வாட்டத்தில் தோல்வி கண்டது அதன் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

மேலும் இதனால் நிர்வாகி மைக்கல் கேரிக்கின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது.

மற்றொரு ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் பிரிக்டோன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

நியூகாஸ்டல் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் கிறிஸ்டல் பேலஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset