செய்திகள் விளையாட்டு
லியோனல் மெஸ்ஸி ஸ்பெயினின் மதிப்புமிக்க விளையாட்டு விருதைப் பெற்றார்
மாட்ரிட்:
ஸ்பெயினின் மிகவும் மதிப்புமிக்க விளையாட்டு விருதை லியோனல் மெஸ்ஸி பெற்றார்.
அவரது புகழ்பெற்ற விளையாட்டு வாழ்க்கை, பின்தங்கிய குழந்தைகளுக்கு சுகாதாரம், கல்விக்கான அணுகலை மேம்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டது.
39 வயதான அர்ஜெண்டினா முன்கள வீரரான இவர், கடந்த ஜூன் மாதம் 'அஸ்டூரியாஸ் இளவரசி விளையாட்டு விருது' பெறுபவராக அறிவிக்கப்பட்டார்.
நடுவர் குழு அவரை எல்லாக் காலத்திலும் மிகவும் வெற்றிகரமான கால்பந்து வீரர் என்று பாராட்டியதுடன், அவரது தொண்டுப் பணிகளையும் அங்கீகரித்தது.
வடக்கு ஸ்பெயின் பிராந்தியமான அஸ்டூரியாஸின் தலைநகரான ஓவியெடோவில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவிற்கு, பேக்பைப், மேளங்களின் இசையுடன் மெஸ்ஸி வந்தபோது, அர்ஜெண்டினா ஜெர்சிகளை அணிந்திருந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்து அவரது பெயரை முழக்கமிட்டனர்.
இந்த விருதுக்கு பெயரிடப்பட்ட ஸ்பானிய அரியணையின் வாரிசான இளவரசி லியோனோரிடமிருந்து மெஸ்ஸி அதிகாரப்பூர்வ பட்டயத்தைப் பெற்றார்.
லியோனோர் அந்த கால்பந்து நட்சத்திரத்தின் தனித்துவமான விளையாட்டு வாழ்க்கையையும் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 24, 2026, 9:34 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
October 23, 2026, 3:45 pm
FIFA தலைவராக INFANTINO தொடர ஆசியா காற்பந்து சம்மேளம் ஆதரவு
October 23, 2026, 9:03 am
ஜேடிதி அணிக்கு பிபா அபராதம் விதித்தது
October 23, 2026, 9:01 am
கோந்தேவை நிர்வாகியாக நியமிப்பது குறித்து மென்செஸ்டர் யுனைடெட் உறுதியற்ற நிலையில் உள்ளது
October 22, 2026, 8:22 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: ரியல்மாட்ரிட் வெற்றி
October 22, 2026, 8:19 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் படுதோல்வி
October 21, 2026, 9:17 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பார்சிலோனா அதிர்ச்சி
October 21, 2026, 9:13 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: மென்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் வெற்றி
October 20, 2026, 12:26 pm
