நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காட்டுத் தீ விவகாரத்தில் மலேசியாவுடன் தொடர்புடைய 21 நிறுவனங்களை இந்தோனேசிய அரசு சாரா அமைப்பு அடையாளம் கண்டுள்ளது

கோலாலம்பூர்:

எல்லை தாண்டிய புகைமூட்ட நெருக்கடிக்குக் காரணமாக அமைந்த காடு, நிலத் தீ விவகாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மலேசியாவுடன் தொடர்புடைய 21 நிறுவனங்களை இந்தோனேசிய சுற்றுச்சூழல் குழு ஒன்று அடையாளம் கண்டுள்ளது.

இந்தோனேசிய சுற்றுச்சூழல் முகமையால் (வால்ஹி) சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு முடிவுகள்,

தோட்ட, பொருட்கள் அமைச்சின் ஆய்வில், இந்தத் தீயில் எந்த மலேசிய தோட்ட நிறுவனங்களும் ஈடுபடவில்லை என்று கண்டறியப்பட்டதாக அக்டோபர் 16 அன்று புத்ராஜெயா வெளியிட்ட அறிக்கையை மறுக்கின்றன.

வால்ஹியின் "செயல்பாட்டாளர் வரைபடப் பகுப்பாய்வு: தீக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள்?" என்ற அறிக்கையைக் குறிப்பிட்டு, அக்குழுவின் காடு, தோட்டப் பிரச்சாரகர் உமி மாருஃபா, மலேசிய அரசாங்கம் வெறும் காகிதக் கொள்கைகள் அல்லது பெருநிறுவன அறிவிப்புகளை மட்டும் நம்பியிருக்காமல், உண்மையான நிலையை விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மலேசிய சுற்றுச்சூழல் குழுக்களுடன் இணையவழியில் நடைபெற்ற வட்டமேசை கலந்துரையாடலில் பேசிய அவர், பல மலேசிய தாய் நிறுவனங்களுடன் தொடர்புடைய சலுகைப் பகுதிகளில் உள்ள தீவிரமான தீப்பொறிகளையும் தீயையும் வால்ஹியின் பகுப்பாய்வு அடையாளம் கண்டுள்ளதாகக் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset