நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டில் காற்றின் தரம் சீரடைந்து வருகிறது: சரவாக்கின் ஒரேஒரு இடத்தில் மட்டும் காற்று ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு 

கோலாலம்பூர்: 

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று காலை காற்றின் தரம் தொடர்ந்து சீரடைந்து வருகிறது.

எனினும், சரவாக் மாநிலத்தில் உள்ள சமலாஜு பகுதியில் மட்டுமே காற்றின் தூய்மைக்கேடு குறியீடு ஆரோக்கியமற்ற அளவை எட்டியுள்ளது.

பிந்துலுவிலிருந்து வடகிழக்கே சுமார் 60 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சமலாஜு பகுதியில் இன்று காலை 9 மணி நிலவரப்படி காற்றின் தூய்மைக்கேடு குறியீடு 152 ஆகப் பதிவாகியுள்ளது.

தலைநகர் கோலாலம்பூரில், பத்து மூடா பகுதியில் காற்றின் தூய்மைக்கேடு  82ஆகவும், சேராஸ் பகுதியில் 57ஆகவும் பதிவாகியுள்ளது.

சிலாங்கூர் மாநிலத்தில், ஜொஹான் செத்தியாவில் API 65ஆகப் பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து கிள்ளான் (57), ஷா ஆலாம் (53) மற்றும் பெட்டாலிங் ஜெயா (52) ஆகிய பகுதிகள் மிதமான நிலையில் உள்ளன.

ஜொகூர் மாநிலத்தில் குளுவாங்கில் 81ஆகப் பதிவான நிலையில், பத்து பஹாட் (79), பாசிர் கூடாங் (70), லார்கின் (67), சிகாமட் (62), பெங்கேராங் (60), கோத்தா திங்கி (58) மற்றும் தங்காக் (57) ஆகிய பகுதிகள் பதிவாகியுள்ளன.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset