நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்கா முதல்வராக அப்துல் ரவூப் யூசோப் தொடர்வார் : அஹ்மத் ஸாஹித் நம்பிக்கை

மலாக்கா: 

மலாக்கா மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் கூட்டணியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வெற்றி பெற்றால், டத்தோ ஸ்ரீ அப்துல் ரவூப் யூசோப் தொடர்ந்து மலாக்கா மாநில முதலமைச்சராகப் பதவி வகிப்பார் என்று பாரிசான் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஸாஹித் ஹமிடி தெரிவித்துள்ளார்.

துணைப் பிரதமருமான அஹ்மட் ஸாஹித், அப்துல் ரவூப்பின் தலைமைத்துவம் மற்றும் அவரது செயல்பாடுகள் மீது நம்பிக்கை இருப்பதாகக் கூறினார்.

குறிப்பாக, அம்னோவின் முன்னாள் செயல் செயலாளராகப் பணியாற்றிய காலத்திலிருந்தே அவரது தலைமைத்துவத் திறன் வெளிப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜாசின் நாடாளுமன்றத் தொகுதிக்கான BN தேர்தல் பிரசாரக் குழுவின் தொடக்க நிகழ்ச்சி, ஜாசினில் உள்ள டேவான் அலமண்டாவில் நடைபெற்றது.

இதில் உரையாற்றிய அஹ்மட் ஸாஹிட், அப்துல் ரவூப் மீதான தனது நம்பிக்கையை நகைச்சுவையாக எடுத்துரைத்தார்.

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது.

வேட்புமனுத் தாக்கல் அக்டோபர் 31ஆம் தேதியும், முன்கூட்டிய வாக்குப்பதிவு நவம்பர் 10ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற மலாக்கா மாநிலத் தேர்தலில், மொத்தம் 28 தொகுதிகளில் பாரிசான் நேஷனல் 21 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியை அமைத்தது.

- மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset