செய்திகள் மலேசியா
தைவானில் ஏற்பட்ட புயல் காற்று: இரு மலேசியர்கள் காயம்: விஸ்மா புத்ரா தகவல்
கோலாலம்பூர்:
தைவானைத் தாக்கிய சாம்பி (Champi) புயல் காரணமாக, மலேசியாவைச் சேர்ந்த இருவர் லேசான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
தைவானின் பல பகுதிகளில் தொடர்ந்து மோசமான வானிலை நிலவி வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த இருவரும் தற்போது மருத்துவச் சிகிச்சை பெற்று வருவதாக மலேசிய வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.
தைப்பேயில் உள்ள மலேசிய நட்புறவு மற்றும் வர்த்தக மையம், அவர்களுக்குத் தேவையான தூதரக உதவிகளை வழங்கி வருகிறது.
தைவானில் உள்ள மலேசிய மாணவர்களுடனும், அந்நாட்டு அதிகாரிகளுடனும் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.
இதன் மூலம், அங்கு வசிக்கும் மலேசியர்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதிப்படுத்த அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்
கடலோரப் பகுதிகள் மற்றும் மலைப்பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும், உள்ளூர் அதிகாரிகள் வெளியிடும் பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் மற்றும் வெளியேற்ற உத்தரவுகளைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், விரைவில் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளவர்கள், தங்களது விமானங்கள் மற்றும் படகுச் சேவைகளின் நிலவரத்தை சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் முன்கூட்டியே சரிபார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தைவானில் இன்னும் பதிவு செய்யாத மலேசியர்கள், அவசரநிலை ஏற்படும்போது அவர்களை விரைவாகத் தொடர்புகொண்டு தேவையான உதவிகளை வழங்குவதற்கு வசதியாக, e-Konsular இணையதளம் மூலம் தங்களைப் பதிவு செய்துகொள்ளுமாறும் விஸ்மா புத்ரா வலியுறுத்தியுள்ளது.
- மவித்ரன்
தொடர்புடைய செய்திகள்
October 24, 2026, 12:26 pm
நாட்டிலுள்ள 22 இடங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
October 24, 2026, 11:26 am
10,000-க்கும் மேற்பட்ட சிறார்களுக்கு உதவிய BUDIMAS அறக்கட்டளையின் எட்டாவது நன்கொடை இரவு விருந்து வெற்றி
October 23, 2026, 10:52 pm
குழந்தைகள், இளைஞர்களிடையே உள்ள மனநலப் பிரச்சினைகள் கவலையளிக்கிறது: அரசியார்
October 23, 2026, 10:05 pm
இந்தோனேசியாவில் காடுகளை எரிப்பதில் மலேசிய நிறுவனம் எதுவும் ஈடுபடவில்லை: ஃபஹ்மி
October 23, 2026, 3:44 pm
சரவாக் மாநில சட்டமன்றம் அக்டோபர் 26ஆம் தேதி கலைக்கப்படும்: அபாங் ஜொஹாரி அறிவிப்பு
October 23, 2026, 3:23 pm
