செய்திகள் மலேசியா
10,000-க்கும் மேற்பட்ட சிறார்களுக்கு உதவிய BUDIMAS அறக்கட்டளையின் எட்டாவது நன்கொடை இரவு விருந்து வெற்றி
கோலாலம்பூர்:
மலேசியா முழுவதும் ஆதரவற்ற, வசதி குறைந்த சிறார்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வரும் BUDIMAS அறக்கட்டளை (The Budimas Charitable Foundation), தனது எட்டாவது வருடாந்திர நன்கொடை இரவு விருந்தை வெற்றிகரமாக நடத்தியது.
“A Night of a Thousand Blessings” என்ற கருப்பொருளில் கோலாலம்பூர் புல்மன் ஹோட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில், 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட 400-க்கும் அதிகமானோர் கலந்துகொண்டு சிறார்களின் நலனுக்குத் தங்களது ஆதரவை வழங்கினர்.
இந்த ஆண்டு BUDIMAS அறக்கட்டளைக்கு ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது. 2026ஆம் ஆண்டில், மலேசியா முழுவதும் 11,000-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற மற்றும் வசதி குறைந்த சிறார்களுக்கு உதவி வழங்கியுள்ளது.
இந்தச் சாதனை, சிறார்களின் நலனில் அறக்கட்டளை கொண்டுள்ள அக்கறையையும், அதன் சேவைகளுக்கு தொடர்ந்து கைகொடுத்து வரும் நன்கொடையாளர்கள், நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் ஆதரவையும் வெளிப்படுத்துகிறது.
இரவு விருந்தின் மூலம் திரட்டப்படும் நிதி, சிறார்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பல்வேறு நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும்.
குறிப்பாக, சத்தான உணவு வழங்குதல், பாதுகாப்பான இல்லங்களில் தங்குவதற்கான வசதிகள், கல்வி வாய்ப்புகள் மற்றும் மருத்துவ உதவிகள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
ஒவ்வொரு சிறாரும் பாதுகாப்பான சூழலில் வளர்ந்து, கல்வி கற்று, ஆரோக்கியமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதே இத்திட்டங்களின் முக்கிய நோக்கமாகும் BUDIMAS அறக்கட்டளையின் CEO, ANNE RAJASIKARAN கூறினார்.
இந்நிகழ்வில் புதிமாஸ் அறக்கட்டளையின் தலைவர் துவாங்கு டத்தோ யாக்கூப் கைரா (Tunku Dato’ Yaacob Khyra) சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். BUDIMAS ஓரியன் சிறார் பராமரிப்பு மையம், தி பியூர் லைஃப் சொசைட்டி (The Pure Life Society) மற்றும் ஹோம் ஃபோர் த ஏஞ்சல்ஸ் (Home for the Angels) ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த சிறார்களும் இந்நிகழ்வில் இடம்பெற்றனர்.
மேலும், நன்கொடையாக வழங்கப்பட்ட பொருட்களைக் கொண்டு நடத்தப்பட்ட அமைதியான ஏல நிகழ்ச்சி, நிதி திரட்டும் முயற்சிக்கு கூடுதல் பங்களிப்பை வழங்கியது.
BUDIMAS அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி பி.என். அன்னே ராஜசேகரன் கூறுகையில், “இந்த ஆண்டில் 11,000-க்கும் மேற்பட்ட சிறார்களுக்கு உதவ முடிந்திருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது.
எங்களின் பணிகளுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் நன்கொடையாளர்கள், நிறுவனப் பங்காளிகள் மற்றும் அனைத்து ஆதரவாளர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அவர்களின் பங்களிப்புகள் மூலம் மேலும் பல சிறார்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன், அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்குவதற்கான வாய்ப்புகளையும் வழங்க முடிகிறது,” என்றார்.
- மவித்ரன்
தொடர்புடைய செய்திகள்
October 24, 2026, 12:26 pm
நாட்டிலுள்ள 22 இடங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
October 24, 2026, 12:19 pm
தைவானில் ஏற்பட்ட புயல் காற்று: இரு மலேசியர்கள் காயம்: விஸ்மா புத்ரா தகவல்
October 23, 2026, 10:52 pm
குழந்தைகள், இளைஞர்களிடையே உள்ள மனநலப் பிரச்சினைகள் கவலையளிக்கிறது: அரசியார்
October 23, 2026, 10:05 pm
இந்தோனேசியாவில் காடுகளை எரிப்பதில் மலேசிய நிறுவனம் எதுவும் ஈடுபடவில்லை: ஃபஹ்மி
October 23, 2026, 3:44 pm
சரவாக் மாநில சட்டமன்றம் அக்டோபர் 26ஆம் தேதி கலைக்கப்படும்: அபாங் ஜொஹாரி அறிவிப்பு
October 23, 2026, 3:23 pm
