செய்திகள் மலேசியா
நெல் கழிவுகளைப் பொருளாதார ரீதியாகப் பயன்படுத்த வேண்டும்; அதனை தீயிட்டு கொளுத்த வேண்டாம்: பி.ப.சங்கத் தலைவர் வேண்டுகோள்
பினாங்கு:
நெல் உமியை திறந்தவெளியில் எரிப்பதை கட்டுப்படுத்தவும், நெல் கழிவுகளின் பொருளாதார மதிப்பை அதிகரிக்கவும்க் நடைமுறைத் தீர்வுகளை உருவாக்க, உயர்கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி அமைப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுமாறு பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் முஹைதீன் அப்துல் காதர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வலியுறுத்தினார்.
2000-ஆம் ஆண்டில், மேற்கு சுமத்ரா மாகாண அரசாங்கத்தின் பிராந்திய முதலீட்டு ஒருங்கிணைப்பு வாரியம், காகித உற்பத்திக்காக நெல் தண்டுகளைக் கூழாக்குவது குறித்து விவசாயிகளுக்கான ஒரு வழிகாட்டியை வெளியிட்டது.
ஒரு ஹெக்டேர் நெல் சாகுபடியில் இருந்து சுமார் 1.2 டன் நெல் தண்டுகளை விளைவிக்க முடியும் என்று அந்த வழிகாட்டி மதிப்பிட்டதாக பி.ப.சங்கத்தின் தலைவர் முஹைதீன் அப்துல் காதர் கூறினார்.
இது, விவசாயக் கழிவுகளை மதிப்புமிக்க மூலப்பொருளாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
கெடாவில் உள்ள மூடா வேளாண் மேம்பாட்டு ஆணையத்தின் பகுதி, ஒவ்வொரு நெல் நடவுப் பருவத்திலும் சுமார் அரை மில்லியன் டன் நெல் தண்டுகளை (நெல் வைக்கோல்) உற்பத்தி செய்கிறது.
இருப்பினும், மாடா பகுதியின் சுமார் 10% ஆன 10,330 ஹெக்டேர் மட்டுமே மீட்புத் திட்டங்களில் பங்கேற்கிறது, இதன் மூலம் தோராயமாக 15,000 டன் வைக்கோல் கிடைக்கிறது.
மீதமுள்ள வைக்கோலில் பெரும்பகுதி வயலிலேயே எரிக்கப்படுகிறது என்றார் முஹைதீன்.
மற்றவை மட்க விடப்படுகிறது அல்லது மண்ணுடன் கலக்கப்படுகிறது.
மண்ணுடன் கலப்பதும், உரமாக மாற்றுவதும் நிலத்திற்கு ஊட்டச்சத்துக்களைத் திருப்பிக் கொடுத்து, மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்றாலும், திறந்தவெளியில் எரிப்பது மாசுபாட்டை ஏற்படுத்துகிறது.
2021 மற்றும் 2023-க்கு இடையில், மாடா பகுதியில் உள்ள சுமார் 5,000 விவசாயிகள் ஏறத்தாழ 15,000 டன் நெல் வைக்கோலை மீட்டெடுத்து, மவெ 3 மில்லியன் விற்பனை மதிப்பை உருவாக்கினர்.
நெல் அறுவடை பருவகாலத்தைச் சார்ந்தது என்றாலும், இது ஒரு பெரிய தடையாக இருக்க வேண்டியதில்லை.
ஏனெனில், நெல் வைக்கோல் கூழை மரக்கூழ் அல்லது மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதத்துடன், பொதியிடல் உட்பட, கலக்க முடியும்.
தாய்லாந்து ஏற்கனவே மக்கும் தன்மையுள்ள காகிதம், பொதியிடல் பொருட்களை உற்பத்தி செய்து வருகிறது.
பிலிப்பைன்ஸ், சீனா, இந்தியாவும் நெல் தண்டுகளைப் பயன்படுத்தி வணிக அளவிலான காகித உற்பத்தியை நோக்கிச் செயல்பட்டு வருகின்றன.
ஆய்வுகளின்படி, அரைக்கப்படும் ஒவ்வொரு 1,000 கிலோ நெல்லுக்கும், சுமார் 220 கிலோ (22%) உமி கிடைக்கிறது. இதை கொதிகலன் எரிபொருளாகப் பயன்படுத்தலாம்.
நெல் வைக்கோலைக் காளான் சாகுபடிக்கும் பயன்படுத்தலாம்.
தங்கள் வைக்கோலின் ஒரு பகுதியைக் காளான் உற்பத்திக்குப் பயன்படுத்தும் விவசாயிகள், விவசாயக் கழிவுகளைக் குறைப்பதோடு கூடுதல் வருமானத்தையும் ஈட்ட முடியும்.
நெல் உமி, தண்டுகளின் பிரச்சனையை வெறும் கழிவு அகற்றும் பிரச்சனையாக மட்டும் பார்க்கக்கூடாது.
மாறாக, இது ஒரு வட்ட வேளாண் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான ஒரு வாய்ப்பாகும்.
இதில், நெல் உற்பத்திக் கழிவுகள் காகிதம், பொட்டலப் பொருட்கள், கால்நடைத் தீவனம், இயற்கை உரம், பிற பயனுள்ள பொருட்களாக மாற்றப்படுகின்றன.
பொருத்தமான தொழில்நுட்ப ஆதரவு, நிதி, சந்தை மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் ஊக்கத்தொகைகளுடன், தற்போது பெரும்பாலும் எரிக்கப்படும் அல்லது வீணாக்கப்படும் பொருட்கள் விவசாயிகளுக்குக் கூடுதல் வருமான ஆதாரமாக மாறக்கூடும் என்றார் முகைதீன் அப்துல் காதர்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
October 23, 2026, 10:52 pm
குழந்தைகள், இளைஞர்களிடையே உள்ள மனநலப் பிரச்சினைகள் கவலையளிக்கிறது: அரசியார்
October 23, 2026, 10:05 pm
இந்தோனேசியாவில் காடுகளை எரிப்பதில் மலேசிய நிறுவனம் எதுவும் ஈடுபடவில்லை: ஃபஹ்மி
October 23, 2026, 3:44 pm
சரவாக் மாநில சட்டமன்றம் அக்டோபர் 26ஆம் தேதி கலைக்கப்படும்: அபாங் ஜொஹாரி அறிவிப்பு
October 23, 2026, 3:23 pm
WAZE செயலியைத் தடை செய்ய அரசாங்கம் பரிசீலனை: பிரதமர் அன்வார்
October 23, 2026, 3:15 pm
மலாக்கா மாநில தேர்தல்: நம்பிக்கை கூட்டணி குறைந்தது 18 இடங்களில் போட்டியிடும்
October 23, 2026, 3:12 pm
தேசிய முன்னணியுடன் இணைந்து பாஸ் கட்சி கூட்டாக வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியா? பாஸ் கட்சி மறுப்பு
October 23, 2026, 3:11 pm
