செய்திகள் மலேசியா
போதைப்பொருள் கூடாரமாக ஆலயம் பயன்படுத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டு; சமரசமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: மஹிமா
கோலாலம்பூர்:
ஆலயங்களை போதைப்பொருள் சேமிப்புக் கிடங்குகளாகப் பயன்படுத்துவது உள்ளிட்ட குற்றச் செயல்களுக்கு எந்தவித சமரசமும் காட்டக்கூடாது.
மஹிமா தலைவர் டத்தோக் என். சிவக்குமார் இதனை வலியுறுத்தியுள்ளார்.
வழிபாட்டுத் தலம் போதைப்பொருள் சேமிக்கும் இடமாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில், 162 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், எட்டு பேர் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவலைத் தீவிரமாகக் கருத வேண்டும்.
மதத்தின் பெயரையோ வழிபாட்டுத் தலங்களையோ பயன்படுத்திக் குற்றச் செயல்களில் ஈடுபடும் எந்தவொரு நபரையும் மஹிமா பாதுகாக்காது.
எந்தவொரு நபரின் பின்னணி, பதவி அல்லது அடையாளத்தைப் பொருட்படுத்தாமல் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும்.என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.
வழிபாட்டுத் தலங்கள் புனிதமான இடங்களாகும்.
அவை சமயம், ஆன்மிகம் மற்றும் சமூக நலப் பணிகளுக்கான மையங்களாகச் செயல்படுகின்றன. எனவே, சட்டவிரோத நடவடிக்கைகளால் அவற்றின் புனிதத்தன்மை பாதிக்கப்படக்கூடாது.
மேலும், போலிஸ் சம்பந்தப்பட்ட அமலாக்க அமைப்புகள் மேற்கொள்ளும் விசாரணைகளுக்கும், குற்றம் நிரூபிக்கப்படும் நபர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுப்பதற்கும் மஹிமா ஆதரவு அளிப்பதாக அவர் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 24, 2026, 1:40 pm
மலாக்கா முதல்வராக அப்துல் ரவூப் யூசோப் தொடர்வார் : அஹ்மத் ஸாஹித் நம்பிக்கை
October 24, 2026, 1:34 pm
யேமனுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க மலேசியா தயார்: முஹம்மத் ஹசான் தகவல்
October 24, 2026, 12:26 pm
நாட்டிலுள்ள 22 இடங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
October 24, 2026, 12:19 pm
தைவானில் ஏற்பட்ட புயல் காற்று: இரு மலேசியர்கள் காயம்: விஸ்மா புத்ரா தகவல்
October 24, 2026, 11:26 am
10,000-க்கும் மேற்பட்ட சிறார்களுக்கு உதவிய BUDIMAS அறக்கட்டளையின் எட்டாவது நன்கொடை இரவு விருந்து வெற்றி
October 23, 2026, 10:52 pm
