செய்திகள் மலேசியா
பள்ளிகளில் பகடிவதை, கொலை சம்பவங்களை ஒழிக்க மாணவர்களை கண்டிக்கும் அதிகாரம் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்: ராஜன் வலியுறுத்தல்
சுபாங்ஜெயா:
பள்ளிகளில் பகடிவதை, கொலை சம்பவங்களை ஒழிக்க மாணவர்களை ல் கண்டிக்கும் அதிகாரம் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.
பெட்டாலிங்ஜெயா திறன் சமூக நல அமைப்பின் தலைவரும் முன்னாள் போலிஸ்படைத் தலைவருமான ராஜன் கூறினார்.
பள்ளிகளில் மாணவர்களிடையே நடக்கும் பகடிவதை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
குறிப்பாக தற்போது பள்ளிகளில் கொலை சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இவ்வாண்டு மட்டும் 5 கொலைகள் பள்ளிகளில் நிகழ்ந்துள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் அதிர்ச்சியுடன் வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
இதுபோன்ற சம்பவங்கள் தொடரக்கூடாது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இதற்கு மாணவர்களை கண்டிக்கும் அதிகாரம் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.
கடந்த காலங்களில் ஆசிரியர்களை பார்த்தால் மாணவர்களுக்கு ஒரு பயம் வரும்.
ஆனால் இப்போது மாணவர்களை அடித்தால் விஷயம் போலிஸ் நிலையம் வரை சென்று வருகிறது.
ஆக இதுபோன்ற விவகாரங்களில் பெற்றோர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும் என்று ராஜன் கூறினார்.
முன்னதாக பெட்டாலிங்ஜெயா திறன் சமூக நல அமைப்பின் ஏற்பாட்டில் சிகரத்தை நோக்கி என்ற கருத்தரங்கு துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்றது.
பெட்டாலிங் மாவட்ட தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் மன்றம், பள்ளியின் ஆதரவுடன் நடைபெற்றது.
முன்னாள் போலிஸ் மூத்த அதிகாரி டத்தோஸ்ரீ தெய்வீகன், மீபா தலைவர் அன்பானந்தன் உட்பட பல பிரமுகர் இதில் கலந்து கொண்டு உரையாற்றினர்.
பெட்டாலிங்ஜெயா திறன் சமூக நல அமைப்பு தொடங்கப்பட்டு 5 மாதங்கள் தான் ஆகிறது.
இருந்தாலும் பல்வேறு நடவடிக்கைகளை சங்கம் மேற்கொண்டு வருகிறது.
தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான சிகரத்தை நோக்கி கருத்தரங்கு தொடர்ச்சியாக நடைபெறும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 24, 2026, 1:40 pm
மலாக்கா முதல்வராக அப்துல் ரவூப் யூசோப் தொடர்வார் : அஹ்மத் ஸாஹித் நம்பிக்கை
October 24, 2026, 1:34 pm
யேமனுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க மலேசியா தயார்: முஹம்மத் ஹசான் தகவல்
October 24, 2026, 12:26 pm
நாட்டிலுள்ள 22 இடங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
October 24, 2026, 12:19 pm
தைவானில் ஏற்பட்ட புயல் காற்று: இரு மலேசியர்கள் காயம்: விஸ்மா புத்ரா தகவல்
October 24, 2026, 11:26 am
10,000-க்கும் மேற்பட்ட சிறார்களுக்கு உதவிய BUDIMAS அறக்கட்டளையின் எட்டாவது நன்கொடை இரவு விருந்து வெற்றி
October 23, 2026, 10:52 pm
