செய்திகள் மலேசியா
யேமனுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க மலேசியா தயார்: முஹம்மத் ஹசான் தகவல்
கோலாலம்பூர்:
யேமன் நாட்டில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க மலேசியா தயாராக இருப்பதாக வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முஹம்மது ஹசான் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் மீண்டும் பேச்சுவார்த்தைக்குத் திரும்பி, பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நீண்டகாலமாகத் தொடரும் உள்நாட்டுப் போரினால் யேமன் மக்கள் பெரும் துயரங்களை அனுபவித்து வருவதாக முகமது ஹசான் கூறினார்.
குறிப்பாக, உணவுப் பற்றாக்குறை, பட்டினி மற்றும் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் சிரமங்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையை வெகுவாகப் பாதித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
யேமனின் தற்போதைய நிலவரம் குறித்து அந்நாட்டின் வெளியுறவு மற்றும் வெளிநாட்டவர் விவகார அமைச்சர் டாக்டர் அஃப்ரா அப்துல்அசீஸ் அல்-சூபா, வியாழக்கிழமை தொலைபேசி வாயிலாகத் தம்மிடம் விளக்கியதாக முஹம்மது ஹசான் கூறினார்.
“உதவி தேவைப்படும் நாடுகளுக்கு, மலேசியாவின் திறனுக்கு ஏற்ப மனிதாபிமான உதவிகளை வழங்கவும், நிவாரணப் பணிகளில் பங்கேற்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.
யேமனில் நீடிக்கும் மோதலுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்றும், இந்தப் போரினால் சுமார் 2.2 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மஹம்மது ஹசான் குறிப்பிட்டார்.
இந்த மோதல் மக்களுக்கு எந்த நன்மையையும் அளிக்கவில்லை; மாறாக, அவர்களின் துயரங்களை மேலும் அதிகரித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
- மவித்ரன்
தொடர்புடைய செய்திகள்
October 24, 2026, 1:40 pm
மலாக்கா முதல்வராக அப்துல் ரவூப் யூசோப் தொடர்வார் : அஹ்மத் ஸாஹித் நம்பிக்கை
October 24, 2026, 12:26 pm
நாட்டிலுள்ள 22 இடங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
October 24, 2026, 12:19 pm
தைவானில் ஏற்பட்ட புயல் காற்று: இரு மலேசியர்கள் காயம்: விஸ்மா புத்ரா தகவல்
October 24, 2026, 11:26 am
10,000-க்கும் மேற்பட்ட சிறார்களுக்கு உதவிய BUDIMAS அறக்கட்டளையின் எட்டாவது நன்கொடை இரவு விருந்து வெற்றி
October 23, 2026, 10:52 pm
