நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தென் கிள்ளானில் போதைப்பொருள் பதுக்கி வைக்கும் இடமாகப் பயன்படுத்தப்பட்ட பதிவு செய்யப்படாத கோயில் கிடங்கில் போலிஸ் சோதனை

ஷாஆலம்:

தென் கிள்ளானில் உள்ள, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து போதைப்பொருள் பதுக்கி வைக்கும் இடமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த பதிவு செய்யப்படாத கோயிலின் கிடங்கில், சமீபத்திய நடவடிக்கையில் போலிஸ் சோதனை நடத்தினர்.


கோயில் நிர்வாகத்தில் பகுதி நேர உதவியாளராக இருந்த ஒருவரும் இந்தச் சோதனையின் போது கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் போலிஸ் தலைவர் டத்தோ ஷசாலி கஹார் கூறினார்.

நாங்கள் இன்னும் விசாரித்து வருகிறோம். ஆனால் போதைப்பொருள் பதுக்கி வைப்பதற்கான மறைவிடமாக கோயில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதை நாங்கள் நிராகரிக்கவில்லை.

ஏனெனில் இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில், கோயில் பதிவு செய்யப்படவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

அந்த நிலம் கோயிலுக்கானது அல்ல, மாறாக கழிவுநீர் வடிகாலுக்கானது என்று அவர்  சிலாங்கூர் போலிஸ் படை தலைமையகத்தில்  நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

முன்னதாக கடந்த அக்டோபர் 13 முதல் 19 வரை கிள்ளான், ரவாங், கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில்  நடத்தப்பட்ட ஐந்து தனித்தனி தொடர் சோதனைகளில் இந்தக் கோயில் கிடங்கும் அடங்கும் என்று அவர் கூறினார்.

இந்த சோதனை நடவடிக்கையில், நான்கு போதைப்பொருள் கும்பல்கள் வெற்றிகரமாகப் பிடிக்கப்பட்டன.

மேற்கொள்ளப்பட்ட ஐந்து கட்ட சோதனைகளில், உள்ளூர், சர்வதேச போதைப்பொருள் கும்பல்களின் வலையமைப்பில் ஈடுபட்டதாக நம்பப்படும் நான்கு உள்ளூர்வாசிகள் மற்றும் நான்கு வெளிநாட்டினர் உட்பட எட்டு சந்தேக நபர்களை போலிஸ் கைது செய்தது என்று அவர் கூறினார்.

கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேக நபர்களும் 19 முதல் 48 வயதுக்குட்பட்டவர்கள்.

அவர்களில் மூன்று உள்ளூர் ஆண்கள், ஒரு பெண், மூன்று வெளிநாட்டு ஆண்கள், ஒரு பெண் ஆகியோர் அடங்குவர் என்றும் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset