செய்திகள் மலேசியா
1 எம்டிபி சொத்துக்களை மீட்கும் முயற்சிகளைப் பொதுமன்னிப்பு பாதிக்காது: பிரதமர் அன்வார்
கோலாலம்பூர்:
1 எம்டிபி தொடர்பான குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்ட தனிநபர்களுக்கான பொதுமன்னிப்பு, சொத்துக்களை மீட்கும் அரசாங்கத்தின் முயற்சிகளைப் பாதிக்காது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை தெரிவித்துள்ளார்.
உரிமையியல் வழக்குகள் அவற்றின் சட்ட அடிப்படை, ஆதாரத் தேவைகளின் அடிப்படையில் குற்றவியல் நடவடிக்கைகளிலிருந்து வேறுபட்டவையாகும்.
உரிமையியல் வழக்குகளைத் தொடர்வதற்கான அரசாங்கத்திற்கும் 1MDB-க்கும் உள்ள உரிமை, வழக்கின் அடிப்படை, கிடைக்கப்பெறும் ஆதாரங்கள் மற்றும் நீதிமன்ற உத்தரவைப் பொறுத்தது.
அதேபோல், எந்தவொரு சொத்துப் பறிமுதல் நடவடிக்கையும் சட்டத்தின் விதிகளுக்கும், அந்த நடவடிக்கையை நிர்வகிக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டது.
1 எம்டிபி தொடர்பான சொத்துக்களை மீட்பதற்கான கோரிக்கையையும் முயற்சிகளையும் தொடர்வதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்று அவர் நாடாளுமன்றத்திற்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறினார்.
கைதிகளுக்கு வழங்கப்படும் தண்டனை தொடர்பான முன்னேற்றங்களைத் தொடர்ந்து, 1எம்டிபி தொடர்பான சொத்துக்களை மீட்பதற்கான முயற்சிகள் பாதிக்கப்படாது என்று அரசாங்கம் உறுதியளிக்க வேண்டும் எனக் கோரிய ஈப்போ திமோர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹோவர்ட் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது அவர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 23, 2026, 11:27 am
சரவா மாநில சட்டமன்றம் இன்று மாலை கலைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
October 23, 2026, 10:36 am
மொழி, இலக்கிய வளர்ச்சிக்கு சமூகத்தின் ஒற்றுமை அவசியம்: டத்தோ ப.சகாதேவன் கருத்து
October 23, 2026, 9:51 am
மலாக்கா மாநில தேர்தல் வேட்பாளர்களை அறிவிக்க தேசிய முன்னணி, பாஸ் மேடையைப் பகிர்ந்து கொள்ளும்: ஜாஹித்
October 23, 2026, 9:21 am
நேப்பாளத்தில் காணாமல் போன 54 பேரை கண்டறியும் முயற்சிகளை மலேசியா தொடர்கிறது: முஹம்மது ஹசான்
October 22, 2026, 10:16 pm
