நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆசிரியரைத் தாக்கிய மாணவர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்: 24 பேரிடம் போலிஸ் வாக்குமூலம் பதிவு செய்தது

கூச்சிங்:

கடந்த புதன்கிழமை இங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியரைத் தாக்கிய 16 வயது மாணவர், இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சரவா தற்காலிக போலிஸ் தலைவர் சைஃபுல்லிசான் இஷாக் இதனை கூறினார்.

சந்தேக நபரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டும், மருத்துவ அதிகாரிகளின் ஆலோசனை மதிப்பீட்டிற்கு உட்பட்டும், போலிசார் தங்கள் விசாரணையைத் தொடர்வதாகக் கூறினார்.

விசாரணை முழுவதும் நடைமுறையில் உள்ள அனைத்து சட்ட நடைமுறைகளும் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதாக காவல்துறை உறுதியளித்ததாக அவர் கூறினார்.

விசாரணைக்கு உதவுவதற்காக மொத்தம் 24 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.

சந்தேக நபர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும், கூச்சிங்கில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் குறித்த விசாரணையை முடிக்க உதவுவதற்காக, நேற்று வரை போலிசார் பல நடவடிக்கைகளை எடுத்திருந்தது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset