செய்திகள் மலேசியா
மொழி, இலக்கிய வளர்ச்சிக்கு சமூகத்தின் ஒற்றுமை அவசியம்: டத்தோ ப.சகாதேவன் கருத்து
கோலாலம்பூர்:
ஓர் இனத்தின் மொழி, இலக்கிய வளர்ச்சிக்குச் சமூகத்தின் ஒற்றுமை என்றும் அவசியமானது.
சமூகத்தின் ஒற்றுமையால் சிறந்த ஆளுமை நிறைந்த படைப்பாற்றலையும் எழுத்தாளர்களையும் உருவாக்க முடியும் என்று தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ ப.சகாதேவன் கூறினார்.
கடந்த 33 ஆண்டுகளாக மலேசிய இந்தியர்களின் வாழ்க்கை, வாழ்வியல் கொண்டு இலக்கிய படைப்புகள் தமிழ் உலகிற்கு வழங்கப்பட்டது.
அதேபோல் 34ஆவது ஆண்டில் மொழி, இலக்கிய அறவாரியத்தின் சிறுகதை, கட்டுரை, கவிதை போட்டிகளில் மலேசிய தமிழர்களின் வாழ்வியலைத் தொடும் படைப்புகள் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
தமிழ் எழுத்தாளர்களை உருவாக்கும் நோக்கில் தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கம் இந்த போட்டியை வருடம் முழுவதும் ஏற்று நடத்துகிறது
இது எங்களின் தலையாய கடமையாகவும் இலக்கிய உலகில் நம்மவர்கள் தொடர்ந்து ஆக்கப்பூர்வ படைப்புகளை வழங்க வேண்டும் என்பதையும் எடுத்து காட்டுவதாக நிகழ்ச்சிப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் சொன்னார்.
NLFCS மொழி இலக்கிய அறவாரியத்தின் 34ஆவது இலக்கிய போட்டியின் பரிசளிப்பு விழா கோலாலம்பூர் டான்ஸ்ரீ சோமா அரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் டத்தோ ப.சகாதேவனுடன் இந்திய ஆய்வியல் துறையின் முன்னாள் விரிவுரையாளர் முனைவர் கிருஷ்ணன் மணியம், டான்ஸ்ரீ மாரிமுத்து, NFLCS இயக்குநர் வாரிய உறுப்பினர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 23, 2026, 9:54 am
1 எம்டிபி சொத்துக்களை மீட்கும் முயற்சிகளைப் பொதுமன்னிப்பு பாதிக்காது: பிரதமர் அன்வார்
October 23, 2026, 9:51 am
மலாக்கா மாநில தேர்தல் வேட்பாளர்களை அறிவிக்க தேசிய முன்னணி, பாஸ் மேடையைப் பகிர்ந்து கொள்ளும்: ஜாஹித்
October 23, 2026, 9:21 am
நேப்பாளத்தில் காணாமல் போன 54 பேரை கண்டறியும் முயற்சிகளை மலேசியா தொடர்கிறது: முஹம்மது ஹசான்
October 22, 2026, 10:16 pm
துன் மகாதீர் தன் மனைவியின் அடக்கஸ்தலத்திற்கு இன்று வந்தபோது ஆரோக்கியத்துடன் காணப்பட்டார்
October 22, 2026, 9:39 pm
