நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

திபெத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு

பெய்ஜிங்:

திபெத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

திபெத்தின் உள்ளூர் நேரப்படி இரவு 10.33 மணியளவில், பாக்கன் கவுண்டிக்கு உட்பட்ட நாக்சு நகரத்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவாகி உள்ளது என்று சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக அரசின் ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்தனர். 32 பேர் காயமடைந்தனர்.

நகு நகர அவசரகால மேலாண்மைப் பணியகத்தை மேற்கோள் காட்டி சின்ஹுவா செய்தி நிறுவனம், வெள்ளிக்கிழமை அதிகாலை 2:25 மணி நிலவரப்படி, காயமடைந்தவர்களில் 11 பேர் கவலைக்கிடமான நிலையிலும், மற்ற 21 பேர் லேசான காயங்களுடனும் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

- பார்த்திபன் நாகராஜ்ன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset