செய்திகள் உலகம்
கொலம்பியாவில் தங்கச் சுரங்கம் சரிந்து விபத்து: 14 பேர் பலி, 7 பேர் காயம்
போகோடா:
தென்மேற்கு கொலம்பியாவில் உள்ள சட்டவிரோத தங்கச் சுரங்கம் சரிந்து விழுந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவத்தில் மேலும் 7 பேர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் திங்கட்கிழமை தெரிவித்தனர்.
இந்தச் சோக விபத்து நரீனியோ மாகாணத்தில் உள்ள சாண்டா பார்பரா டி இஸ்குவாண்டே நகராட்சியின் சம்பேரோ கிராமப்புறப் பகுதியில் நிகழ்ந்துள்ளது.
விபத்து நடந்த இடத்தில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக நரீனியோ மாநில ஆளுநர் லூயிஸ் அல்போன்சோ எஸ்கோபார் தெரிவித்தார்.
சுரங்கத் தொழிலாளர்களின் பணிச்சூழலையும் பாதுகாப்புத் தரத்தையும் மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் வலியுறுத்தினார்.
சட்டவிரோத மற்றும் சிறிய அளவிலான சுரங்கங்களை முறைப்படுத்தும் செயல்பாட்டை விரைவுபடுத்துமாறு தேசிய அரசு, சுரங்க முகமை மற்றும் சுரங்க சக்தி அமைச்சகத்திற்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கு முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதத்திலும் நரீனியோ மாகாணத்தின் பொலிகார்பா (Policarpa) நகரில் இதுபோன்ற ஒரு சுரங்க விபத்து நிகழ்ந்தது. அந்தச் சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 20, 2026, 11:19 am
பாரிஸில் வன்முறை வெடிப்பு: இரவு நேர ஊரடங்கு அமல்
October 19, 2026, 3:27 pm
இந்தோனேசியாவில் புகைமூட்டத்தைக் கலைக்க பனிக்கட்டிகள்
October 19, 2026, 11:16 am
பதவியேற்ற ஒருவாரத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர்: அதிபர் டிரம்ப் உத்தரவு
October 18, 2026, 10:51 am
இலங்கை முழுவதும் மின்தடை
October 16, 2026, 4:09 pm
பாகிஸ்தான் பள்ளிக்கூட மேற்கூரை இடிந்து விழுந்ததில் 34 பேர் உயிரிழந்தனர்
October 15, 2026, 12:25 pm
புலியைத் துரத்தி சென்று சாய்த்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்: AI வீடியோ வைரல்
October 15, 2026, 12:19 pm
