நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

காதலியுடன் வாழ சொத்துக்களை விற்று 1,900 கிலோமீட்டர் தூரம் வரை சென்ற நபருக்கு இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி 

பிரேசிலியா: 

பிரேசிலின் மாரன்ஹாவோ மாநிலத்தில் உள்ள இம்பராட்ரிஸைச் சேர்ந்த 49 வயதான எடிமார் ரோச்சா மார்டின்ஸ் (Edimar Martins) என்ற நபர் கொத்தனாராக பணியாற்றி வந்துள்ளார்.

அவர் தனது தாயை இழந்த நிலையில், தனக்கு ஒரு வாழ்க்கை துணையை தேடி வந்துள்ளார்.

அப்போது இன்ஸ்டாகிராமில், ஜெசிகா ஃபசென்டெய்ரா என்று அறியப்படும் ஒரு பெண்ணின் சமூக ஊடகக் கணக்கை கண்டுள்ளார்.

3 லட்சம் பின்தொடர்வோரை கொண்ட அந்த கணக்கில், ஒரு பண்ணையில் ரம்மியமான கிராமப்புற வாழ்க்கையை வாழும் ஒரு பெண்ணின் காணொளிகள் இடம்பெற்றிருந்தன.

அவருக்கு தனிபட்ட முறையில் செய்திகளை அனுப்பிய அவர், அந்த கணக்கிடமிருந்து பதில் வந்ததும் அவரை தன்னை வாழ்க்கை துணையாக கருத தொடங்கியுள்ளார்.

இதனை நம்பிய அவர், அந்த பெண்ணை சந்திப்பதற்கான பயண செலவுக்கு தனது உடமைகளை விற்று, அக்டோபர் 9 அன்று, பிரேசிலின் தென்கிழக்கு மாநிலமான மினாஸ் ஜெரைஸின் தலைநகரான பெலோ ஹொரிசோன்டேவுக்குச் புறப்பட்டுள்ளார்.

பேருந்து மூலம், 1900 கிமீ பயணம் செய்து அக்டோபர் 11 ஆம் திகதி அந்த பகுதியை வந்தடைந்துள்ளார்.

இறுதியில் அந்த பெண் AI என்று தெரிந்ததும் பெரும் ஏமாற்றம் அடைந்த அவர் நகராட்சி அதிகாரிகள் உதவியுடன் வீடு திரும்பி சென்றார் 

இதில் மிகுந்த ஏமாற்றம் அடைந்திருந்தாலும், தான் பெண் தேடுவதை நிறுத்தப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset