நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தீபாவளி குதூகலத்தில் சாங்கி விமான நிலையம்

சிங்கப்பூர்:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சாங்கி விமான நிலையம் கோலாகலமாகச் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம்வரை வருகையாளர்கள் 5 இடங்களில் அந்த அலங்காரங்களைக் கண்டு மகிழலாம்.
விளம்பரம்
Advertisement – SEITHI Mediacorp logo

மயில், தீபம், கோலம் ஆகியவற்றின் அடிப்படையில் வண்ணமயமாக அலங்காரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அதிலும் 2ஆம், 3ஆம் முனையங்களின் அலங்காரங்களைக் காணத் தவறிவிடக்கூடாது.

2ஆம் முனையத்தின் 6 மீட்டர் உயர அலங்கார வளைவில்
மயில்களும் பூக்களும் இடம்பெற்றுள்ளன.

சாங்கி விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆகப் பெரிய வளைவுக் கட்டமைப்பு அதுவே.
 
3ஆம் முனையத்தில் கண்கவரும் மயிலைக் காணலாம்.

பலருக்கும் சிங்கப்பூரைப் பற்றிய முதல் அறிமுகம் அளிக்கும் இடமாகவும், நாட்டை விட்டுச் செல்லும்போது இறுதி நினைவாக மனதில் பதியும் இடமாகவும் சாங்கி விமான நிலையம் விளங்குகிறது என்று விமான நிலையச் செயல்பாட்டு சேவைகளின் மூத்த நிர்வாகி அஷ்ரஃப் அலி (Ashraf Ali) தெரிவித்தார்.

தீபாவளி அலங்காரங்கள் மூலம் பயணிகளுடன் பண்டிகை உணர்வைப் பகிர விரும்புவதாக அவர் சொன்னார்.

-ஆதாரம்: Mediacorp seithi

​​​​​​

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset