நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சவூதி விமான நிலையத் தாக்குதல்: ஒருவர் பலி; 8 பேர் காயம்

ரியாத்: 

சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள கிங் ஃபஹத் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்.

மேலும் எட்டு பேர் காயமடைந்தனர் என்று அந்நாட்டின் சிவில் விமான போக்குவரத்து பொது வாரியம்  உறுதிப்படுத்தியுள்ளது. 

காயமடைந்த எட்டு பேரும் உடனடி சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களின் காயங்கள் லேசானவை முதல் பலத்த காயங்கள் வரை பல்வேறு நிலைகளில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதலினால் விமான நிலைய வளாகத்திற்கு ஏற்பட்ட பொருள் சேதங்கள் குறித்தும், அதன் அளவுகள் குறித்தும் பாதுகாப்பு அமைப்புகளும் அதிகாரிகளும் தொடர்ந்து தீவிர மதிப்பீடு செய்து வருகின்றனர்.

இருப்பினும், தாக்குதலின் பின்னணி அல்லது முழுமையான விவரங்கள் குறித்து மேலதிகத் தகவல்களை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை.

யேமனின் ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கும் சவூதி தலைமையிலான கூட்டுப் படைகளுக்கும் இடையே தீவிரமடைந்து வரும் மோதல்களுக்கு மத்தியிலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset