நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பாரிஸில் வன்முறை வெடிப்பு: இரவு நேர ஊரடங்கு அமல்

பாரிஸ்:

சமீபத்திய ஆண்டுகளில் இல்லாத அளவிற்குப் பிரான்ஸ் தலைநகரில் கடுமையான கலவரங்கள் வெடித்துள்ளன.

இதனைத் கட்டுப்படுத்த பாரிஸின் முக்கியப் பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு உத்தரவை காவல்துறையினர் திங்கள்கிழமை பிறப்பித்துள்ளனர்.

இந்த வன்முறைச் சம்பவங்களின் போது நகரமன்றக் கட்டிடங்கள், பொதுச் சொத்துகள் மற்றும் ஆயிரக்கணக்கான வணிக வளாகங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சொத்துக்களைச் சூறையாடலில் இருந்து பாதுகாப்பதே இந்த அவசர நடவடிக்கையின் நோக்கமாகும் என பாரிஸ் காவல்துறை அறிவித்துள்ளது.

இந்த ஊரடங்கு உத்தரவு திங்கள்கிழமை இரவு 11 மணி முதல் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை அமலில் இருக்கும்.

மேலும், இரவு 8 மணி முதல் எந்தவொரு பொதுக் கூட்டங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகக் காவல் துறை அறிவித்துள்ளது.

முன்னதாக, பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு மிகவும் குறிப்பிட்ட மற்றும் வரையறுக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

இதன் அடிப்படையில் நாட்டின் சில தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கியப் பகுதிகளில் இந்தக் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset