நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஃபேன்சி அகாடாமி அணிச்சல், பேக்கரி துறையில் திறமையான சாதனையாளர்களை உருவாக்கும்: விக்னேஸ்வரி நம்பிக்கை

பெட்டாலிங்ஜெயா:

ஃபேன்சி அகாடமி அணிச்சல், பேக்கரி துறையில் திறமையான சாதனையாளர்களை உருவாக்கும்.

ஃபேன்சி அகாடமியின் தோற்றுநர் விக்னேஸ்வரி @ வியானா இந்த நம்பிக்கையை தெரிவித்தார்.

சிறுவயது முதலே பேக்கரி, கேக் தயாரிப்பில் கொண்டிருந்த ஆர்வத்தை விடாமல் தொடர்ந்து வளர்த்து கொண்டு வந்தேன்.

இதன் அடிப்படையில் கடந்த 2009ஆம் ஆண்டு ஃபேன்சி கேக் தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டது.

தற்போது அடுத்த கட்டமாக ஃபேன்சி அகாடமி என்ற பெயரில் பேக்கரி பயிற்சி மையம் இன்று திறக்கப்பட்டுள்ளது.


OUG Parklane பகுதியில் அமைந்துள்ள இந்த அகாடமி, பேக்கரி துறையில் ஆர்வம் கொண்டவர்களுக்கு தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பை வழங்கும் நோக்கத்துடன் செயல்படத் தொடங்கியுள்ளது.

சிறுவயது முதலே பேக்கரி துறையில் தனக்கு அதிக ஆர்வம் இருந்ததாக தெரிவித்தார்.

அந்த ஆர்வத்தின் அடிப்படையில் ஆரம்பத்தில் சிறிய அளவில் கேக் தயாரித்து விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டதாகவும், பின்னர் தனது அனுபவத்தையும் திறமையையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு சிலருக்கு கேக் தயாரிப்பு தொடர்பான பயிற்சிகளை வழங்கியதாகவும் கூறினார்.

கேக் விற்பனையில் தொடங்கிய தனது பயணம், தற்போது பயிற்சி வழங்கும் அகாடமியை தொடங்கும் அளவுக்கு வளர்ந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


இந்த குறுகிய நிலையில், அதற்குள் 5 பேர் பயிற்சியில் இணைந்துள்ளனர்.

இது தமது முயற்சிக்கு கிடைத்துள்ள ஆரம்பகட்ட வரவேற்பாக அமைந்துள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

மேலும், இந்த வார சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் பென்சி அக்கடாமிக்கு நேரடியாக வந்து, அங்கு வழங்கப்படும் பயிற்சிகள், பாடத்திட்டங்கள், பேக்கரி துறை தொடர்பான முழுமையான விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

அகாடமியின் தொடக்கத்தை முன்னிட்டு, அடுத்த ஒரு வாரத்தில் பதிவு செய்யும் புதிய பயிலாளர்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேக்கரி துறையில் ஆர்வம் கொண்டவர்கள், குறிப்பாக கேக் தயாரிப்பு, அதனை தொழிலாக முன்னெடுக்க விரும்புவோர், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு ஃபேன்சி அகாடமியை அணுகலாம் என விக்னேஸ்வரி நாராஜா தெரிவித்தார்.

ஃபேன்சி அகாடமியின் திறப்பு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.

கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தின் தலைவர் வி.கே.கே. ராஜா இந்த அகாடமியை தொடக்கி வைத்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset