நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

சிங்கப்பூரில் curry puff வாங்க சீனாவிலிருந்து வந்த விநியோக ஊழியர்

சிங்கப்பூர்:

சிங்கப்பூரின் கரி பப் (curry puff) வாங்குவதற்காக சீனாவிலிருந்து வந்ததாகக் கூறப்படும் உணவு விநியோக ஊழியர் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

ஆகஸ்ட் 31ஆம் தேதி குளோயி (Chloe) காணொலி ஒன்றைப் பகிர்ந்தார்.

சீனாவைச் சேர்ந்த அவர் சிங்கப்பூரில் வசிக்கிறார்.

பாயா லேபார் குவார்ட்டர் கடைத்தொகுதியில் உள்ள ஹாங் லிம் curry puff (Hong Lim Curry Puff) கடையில் அந்த ஆடவர் காத்திருந்தார்.

அவர் சீனாவின் மெய்துவான் (Meituan) உணவு விநியோக நிறுவனச் சீருடையை அணிந்திருந்தார்.

கடை ஊழியர்களுடன் பேச அவர் சிரமப்படுவதைக் குளோயி கவனித்தார்.

உதவச் சென்றபோது சீனாவுக்கான உணவு விநியோகத்தை மேற்கொள்வதாக அவர் கூறினார்.

சீனாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் முன்பு சிங்கப்பூர் வந்திருந்தார்.

அப்போது அந்தக் கடையின் curry puffஐ அவர் சுவைத்திருந்தார்.

மீண்டும் அதைச் சாப்பிட விரும்பியதால் மெய்துவான் மூலம் உணவை வாங்கியதாகக் கூறப்பட்டது.

விமானப் பயணத்துக்காக வாடிக்கையாளர் 2,400 யுவான் அதாவது 454 சிங்கப்பூர் வெள்ளி செலுத்தியதாக அந்த ஆடவர் கூறினார்.

- ரோஷித் அலி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset