செய்திகள் வணிகம்
இந்தியாவின் முன்னணி பெருங்காய நிறுவனங்களான எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனப் பெருங்காயங்கள் விற்பனைக்கு தடை
சென்னை:
இந்தியாவின் முன்னணி பெருங்காய நிறுவனங்களான எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனப் பெருங்காயங்கள் விற்பனைக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தடை விதித்துள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட தரத்துடன் பொருள்கள் இல்லை என்ற குற்றச்சாட்டின் கீழ் ஆகஸ்ட் இறுதி வாரத்தில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, நாடு முழுவதும் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட பெருங்காயங்களை திரும்பப் பெறவும் உத்தரவிட்டுள்ளது.
ஃபெனுலா என்னும் செடியிலிருந்து தயாரிக்கப்படுவதே பெருங்காயம். இந்தச் செடியின் தண்டு, வேர்ப் பகுதிகளை காய வைத்து, அதனுடன் கொஞ்சம் கோதுமை, கம் அராபிக் போன்றவை சேர்க்கப்பட்டுத்தான் பெருங்காயம் தயாரிக்கப்படுகிறது.
இந்திய உணவு பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையத்தின் வழிகாட்டுதல்படி, பெருங்காயத் தூளில் ஆல்கஹாலில் கரையக்கூடிய சாறு அளவு குறைந்தபட்சம் 5 சதவிகிதம் இருக்க வேண்டும். அதாவது ஒரு பெருங்காய டப்பாவில் 5 சதவிகிதம் அளவுக்காவது பெருங்காயச் சாறு இருக்க வேண்டும். ஆனால், இந்த நிறுவனங்களின் தயாரிப்புகளில் 1 முதல் 3 சதவிகிதம் மட்டுமே சாறு இருந்துள்ளது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சில பாக்கெட்டுகளில் பெருங்காய சாறு பூஜ்யமாகவும் இருந்துள்ளது. ஆனால், அதிகபட்சமாக ஒரு சதவிகிதம்தான் ஸ்டார்ச் சேர்க்கப்பட வேண்டும். ஆனால், இந்த நிறுவனப் பெருங்காயங்களில் 15 முதல் 35 சதவிகித ஸ்டார்ச் சேர்க்கப்பட்டுள்ளது.
இருக்க வேண்டிய பெருங்காயமே இல்லாமல், குறைந்தபட்சம் சேர்க்க வேண்டிய ஸ்டார்ச் அதிகம் சேர்க்கப்பட்டிருந்ததால், மக்கள் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை சுட்டிக்காட்டி, இந்த நிறுவனப் பெருங்காயங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இத்தனை நாள்களாக மக்களிடையே அதிகம் பிரபலமான இவ்விரண்டு பெருங்காய நிறுவனங்களும் தங்களது பொருள்களை தரமான தயாரிப்பாக மாற்றி அதனை அரசுக்கு அனுப்பி அவை ஆய்வகச் சோதனையில் உறுதி செய்யப்பட்டு இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு வர அனுமதி வழங்கப்படும் வரை யாரும் இந்த நிறுவனப் பெருங்காயங்களை வாங்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 10:07 pm
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு
October 5, 2026, 3:40 pm
சீரகத் தூளில் பூச்சிக்கொல்லி மருந்து: உடனடியாக அகற்ற இந்திய அரசு உத்தரவு
September 26, 2026, 12:30 pm
வட அமெரிக்காவில் மேலும் 250 கடைகளை மூடும் Starbucks
September 11, 2026, 4:22 pm
ஃபேன்சி அகாடாமி அணிச்சல், பேக்கரி துறையில் திறமையான சாதனையாளர்களை உருவாக்கும்: விக்னேஸ்வரி நம்பிக்கை
September 11, 2026, 3:07 pm
இந்தியாவில் iPhone விலை 41% வரை அதிகரிப்பு
September 6, 2026, 5:39 pm
சிங்கப்பூரில் curry puff வாங்க சீனாவிலிருந்து வந்த விநியோக ஊழியர்
August 31, 2026, 8:14 pm
சிங்கப்பூரில் உத்தரவாதமில்லாக் கடன் பெறுவோர் - மறுபரிசீலனை செய்ய 3 நாள் அவகாசம்
August 30, 2026, 9:46 pm
