செய்திகள் மலேசியா
முதலாம் வகுப்பு மாணவி மரணம் குறித்த விசாரணையை கல்வியமைச்சு போலிசாரிடம் ஒப்படைத்துள்ளது: ஃபட்லினா
புத்ராஜெயா:
டெங்கிலில் உள்ள ஒரு பள்ளியில் மூச்சுத்திணறலால் உயிரிழந்த முதலாம் வகுப்பு மாணவி குறித்த விசாரணையை, கல்வியமைச்சு போலிசாரிடம் ஒப்படைத்துள்ளது.
கல்வியமைச்சர் டத்தோஸ்ரீ ஃபட்லினா சிடேக் இதனை கூறினார்.
தனது அமைச்சும் தற்போது உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் பள்ளி ஊழியர்களுக்கும் உளவியல் சமூக ஆதரவை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறது..
முதலில், நாங்கள் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கல்வியமைச்சக மட்டத்தில், நாங்கள் ஏற்கனவே குடும்பத்தினருக்கும் பள்ளி ஊழியர்களுக்கும் உளவியல் சமூக ஆதரவு நடவடிக்கைகள் போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
சிப்பாங் மாவட்ட காவல்துறைத் தலைவரும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
எனவே, போலிசார் விசாரணையின் அடிப்படையில் அந்தக் கருத்தின் பொருளை கல்வியமைச்சு பின்பற்றும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 21, 2026, 10:41 am
முகமது ஷுஹாய்லி குற்றத்தை மறுத்தார்
October 21, 2026, 9:40 am
பள்ளியில் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் முதலாம் வகுப்பு மாணவி உயிரிழந்தார்
October 21, 2026, 9:27 am
இஸ்ரேலின் Waze செயலிக்கு மாற்றாக Tuju செயலியைப் பயன்படுத்துமாறு மக்களை அரசு ஊக்குவிக்கிறது: பிரதமர்
October 21, 2026, 9:24 am
வழிபாட்டுத் தலங்களைச் சேதப்படுத்துபவர்களுக்கு அரசு தொடர்ந்து சிறைத்தண்டனை விதிக்க வேண்டும்: பிரபாகரன்
October 20, 2026, 5:09 pm
நாட்டில் 5,000த்திற்கும் மேற்பட்ட கால்நடை மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது: பிரபாகரன்
October 20, 2026, 3:49 pm
30% கட்டணத் தள்ளுபடியுடன் டிசம்பர் 12 அன்று ECRL தொடங்குகிது: போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக்
October 20, 2026, 3:41 pm
