நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரோஹிங்கியர்களின் பிரச்சினையைத் தீர்க்கும் பொறுப்பை மலேசியா மட்டும் ஏற்கக்கூடாது; மியன்மாரும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்: முஹம்மத் ஹசான்

புத்ராஜெயா:

ரோஹிங்கியர்களின் பிரச்சினையைத் தீர்க்கும் பொறுப்பை மலேசியா மட்டும் ஏற்கக்கூடாது.

மாறாக, நாட்டில் ஒரு நிரந்தரத் தீர்வைக் காண்பதற்காக, இந்த நெருக்கடியின் மூல காரணங்களைக் களைவதற்கு மியன்மார் அரசும் தனது அர்ப்பணிப்பையும் உறுதியான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

இந்த இலக்கை ஆதரிப்பதற்கு, மலேசியா தனது இராஜதந்திர முயற்சிகள், மனிதாபிமான ஒத்துழைப்பின் மூலம் தொடர்ந்து பங்காற்றும்.

மேலும் இதற்கு ஆசியான், சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான ஆதரவும் அவசியம் என்றும் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசான் கூறினார்.

மியன்மாரில் நிலவும் நெருக்கடியின் மூல காரணங்களைக் களைவதன் மூலமே ரோஹிங்கியாக்களைத் தாயகம் திரும்ப அழைத்து வரும் பிரச்சினையைத் தீர்க்க முடியும்.

எனவே, ரோஹிங்கியா இனக்குழுவினர் பாதுகாப்பாகவும், தாமாக முன்வந்தும், கண்ணியத்துடனும், நீடித்த நிலைத்தன்மையுடனும் மியன்மாருக்குத் திரும்புவதற்கான நிலைமைகளை உருவாக்குவதற்காக, மலேசியா இருதரப்பு, வட்டார, சர்வதேச மட்டங்களில் பல்வேறு இராஜதந்திர முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset