செய்திகள் மலேசியா
நாட்டில் 5,000த்திற்கும் மேற்பட்ட கால்நடை மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது: பிரபாகரன்
கோலாலம்பூர்:
நாட்டில் 5,000த்திற்கும் மேற்பட்ட கால்நடை மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
கூன் அனைத்துலக கல்லூரியின் தலைமை இயக்குநர் பிரபாகரன் பெருமாள் இதனை கூறினார்.
மலேசிய மாணவர்கள் கால்நடை மருத்துவக் கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்கில், கூன் அனைத்துலக கல்லூரி, இந்தோனேசியாவின் ஐபிபி பல்கலைக்கழகத்துடன் இணைந்து கல்வி ஒத்துழைப்பை முன்னெடுத்துள்ளது.
இந்த ஒத்துழைப்பின் மூலம், கால்நடை மருத்துவக் கல்விக்கான வாய்ப்புகளை மலேசிய மாணவர்களுக்கு வழங்குவதுடன், வெளிநாட்டில் கல்வி கற்பதற்கான தடைகளையும் குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், 2027ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்காக கூன் அனைத்துலக கல்லூரி மொத்தம் 1.2 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கல்வி உதவித் தொகைகளை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த உதவித்தொகைகள், அறிவியல் அடிப்படையிலான அடிப்படை அறிவியல் பாடத்திட்டத்திற்குத் தகுதி பெறும் மாணவர்களுக்காக வழங்கப்படுகின்றன.
குறிப்பாக, சபா, சரவா மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
மலேசியாவில் கால்நடை மருத்துவக் கல்விக்கான இடங்கள் குறைவாக இருப்பதால், மாணவர்கள் இத்துறையில் கல்வி கற்பதற்கான மாற்று வாய்ப்புகளை உருவாக்குவது அவசியம் எனக் கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கால்நடை மருத்துவர்கள் செல்லப்பிராணிகள், பண்ணை விலங்குகளின் நலன், உணவுப் பாதுகாப்பு மற்றும் பொதுச் சுகாதாரம் ஆகிய துறைகளில் முக்கிய பங்காற்றுகின்றனர்.
2027ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள் கூன் அனைத்துலக கல்லூரியில் தொடங்கியுள்ளன.
விண்ணப்பதாரர்கள் ஐபிபி பல்கலைக்கழகத்தின் கல்வித் தகுதிகள், தேர்வு நடைமுறைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
மேலும் இந்தக் கல்வி ஒத்துழைப்புக்கு ஆதரவு வழங்கிய ஐபிபி பல்கலைக்கழகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக பிரபாகரன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 20, 2026, 3:49 pm
30% கட்டணத் தள்ளுபடியுடன் டிசம்பர் 12 அன்று ECRL தொடங்குகிது: போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக்
October 20, 2026, 3:41 pm
ஆட்சேர்ப்பு முகவரா?: டிக்டாக்கில் போலி வேலை வாய்ப்புகள் குறித்து கே.டி.எம்.பி எச்சரிக்கை
October 20, 2026, 1:28 pm
நேப்பாள வெள்ளத்தில் காணாமல் போன மலேசியர்களின் குடும்ப பிரதிநிதிகளுடன் பிரதமர் சந்திப்பு
October 20, 2026, 1:17 pm
ஏர் ஆசியாவுக்கு நிதியுதவி வழங்குவது குறித்து இதுவரை எந்த உறுதிமொழியும் அளிக்கப்படவில்லை: நிதியமைச்சு
October 20, 2026, 12:52 pm
சங்கங்கள் பதிவிலாகாவின் பதிவு ரத்து நடவடிக்கையை எதிர்த்து தேசியக் கூட்டணி மேல்முறையீடு: தக்கியூடின்
October 20, 2026, 12:46 pm
பெருநிறுவன மாஃபியா கும்பலின் குற்றங்கள் வெளிப்படைத்தன்மையற்ற அமைப்பிலிருந்து உருவாகிறது: பிரதமர்
October 20, 2026, 12:39 pm
போலிஸ் புகாரின் அடிப்படையில் சமூக ஆர்வலர் கைது: விசாரணைக்காக கைத்தொலைபேசிகள் பறிமுதல்
October 20, 2026, 12:34 pm
