நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பள்ளியில் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் முதலாம் வகுப்பு மாணவி உயிரிழந்தார்

சிப்பாங்:

டெங்கில் அருகே உள்ள ஒரு பள்ளியில், நேற்று வகுப்பில் இருந்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் முதலாம் வகுப்பு மாணவி ஒருவர் உயிரிழந்தார்.

நேற்று இரவு 7.30 மணிக்கு ஒரு பெண்ணிடமிருந்து இந்தச் சம்பவம் குறித்து தனது துறைக்குத் தகவல் கிடைத்ததாக சிப்பாங் மாவட்ட போலிஸ் தலைவர் நோர்ஹிஸாம் பஹாமன் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவருக்கு சம்பவ இடத்திலேயே முதற்கட்ட சுவாச உதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக புத்ராஜயா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

மருத்துவமனையில் இருந்தபோது பாதிக்கப்பட்டவர் இறந்துவிட்டதாக மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து செபாங் மாவட்ட காவல் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்தி வருவதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset