நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இஸ்ரேலின் Waze செயலிக்கு மாற்றாக Tuju செயலியைப் பயன்படுத்துமாறு மக்களை அரசு ஊக்குவிக்கிறது: பிரதமர்

புத்ராஜெயா:

Waze செயலிக்கு மாற்றாக Tuju செயலியைப் பயன்படுத்துமாறு மக்களை அரசு ஊக்குவிக்கிறது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

சாலை வழிசெலுத்தல் தேவைகளுக்கான ஒரு மாற்றாக, மலேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் உருவாக்கப்பட்ட உள்ளூர் TuJu செயலியை பொதுமக்கள்  பயன்படுத்த வேண்டும்.

இஸ்ரேலிய சட்டத்திற்கு உட்பட்ட Waze செயலியைப் பயன்படுத்துவதால் மக்களின் தகவல், பயணத் தரவுகளுக்கு ஏற்படும் பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக இந்த மாற்று நடவடிக்கை முன்மொழியப்பட்டுள்ளது.

இணைய அச்சுறுத்தல்களின் வளர்ச்சியை ஆராய்வதற்கும், நாட்டின் இலக்கவியல் தயார் நிலை,  இறையாண்மையை இன்று வலுப்படுத்துவதற்கும் நடைபெற்ற தேசிய சைபர் பாதுகாப்புக் குழு கூட்டத்திற்கு தலைமை தாங்கியபோது விவாதிக்கப்பட்ட விஷயங்களில் இதுவும் ஒன்றாகும் என்று அவர் கூறினார்.

இணைய பாதுகாப்புச் சட்டம் 2024-ஐ செயல்படுத்துதல், MyDigital ID-யின் பாதுகாப்பு, PQC மூலம் குவாண்டம் இணைய அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான ஆயுத்த நிலைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது என்று பிரதமர் முகநூல் பதிவு ஒன்றில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset