நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தொழிலதிபரிடமிருந்து அமைச்சர் ஒருவர் 9.5 மில்லியன் ரிங்கிட் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை  டத்தோஸ்ரீ அன்வார் நிராகரித்தார்

கோலாலம்பூர்:

தொழிலதிபரிடமிருந்து அமைச்சர் ஒருவர் 9.5 மில்லியன் ரிங்கிட் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நிராகரித்தார். 

இது அரசியல் உள்நோக்கம் கொண்டது. ஆதாரமற்றது என்றும் அவர் விவரித்தார்.

மக்களவையில் நடைபெற்ற கேள்வி-பதில் அமர்வின் போது, ​​அனைத்து ஊழல் குற்றச்சாட்டுகளும் விதிவிலக்கின்றி விசாரிக்கப்பட வேண்டும்.

9.5 மில்லியன் ரிங்கிட் தொடர்பான குற்றச்சாட்டுகள் எந்த ஆதாரத்தாலும் ஆதரிக்கப்படாத அரசியல் கூற்றுகளாகும். 

சம்பந்தப்பட்ட அமைச்சர் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து, இந்த விவகாரத்தை நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார் என்று அவர் கூறினார்.

ஊழல் என்பது எந்தவொரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கும் மட்டும் உரியதல்ல என்றும் டத்தோஸ்ரீ அன்வார் வலியுறுத்தினார்.

கெஅடிலான் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட ஒரு வழக்கு இருந்தால், அதைத் தடுக்க நான் என் அதிகாரத்தைப் பயன்படுத்த மாட்டேன். 

ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக விசாரணையை எதிர்கொண்டுள்ள எனது முன்னாள் அரசியல் செயலாளர் ஷம்சுல் இஸ்கந்தர் அகினின் வழக்கும் இதில் அடங்கும் என்று அவர் கூறினார்.

தொழிலதிபர்களான விக்டர் சின், ஃபர்ஹாஷ் வஃபா, சால்வடார் ரிசால் முபாரக், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் தலைமை ஆணையர் அஸாம் பாக்கி ஆகியோர் சம்பந்தப்பட்ட 'பெருநிறுவன மாஃபியா' எனக் குறிப்பிடப்படும் நடவடிக்கைகள் குறித்த விசாரணை சம்பந்தமாக உலு திரெங்கானு நாடாளுமன்ற உறுப்பினர் ரோசோல் வாஹித் எழுப்பிய கேள்விக்கு டத்தோஸ்ரீ அன்வார் இவ்வாறு பதிலளித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset