நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வழிபாட்டுத் தலங்களைச் சேதப்படுத்துபவர்களுக்கு அரசு தொடர்ந்து சிறைத்தண்டனை விதிக்க வேண்டும்: பிரபாகரன்

கோலாலம்பூர்:

வழிபாட்டுத் தலங்களைச் சேதப்படுத்தும் நபர்களுக்கு அபராதம் விதிப்பதை விட, உடனடியாகச் சிறைத் தண்டனை விதிக்க வேண்டும். 

பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி. பிரபாகரன் இதனை பரிந்துரைத்துள்ளார்.

என்பிஇ நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள ஒரு கோவிலில் இருந்த மதச் சிலை சேதப்படுத்தப்பட்ட சமீபத்திய சம்பவத்தை அவர் சுட்டிக்காட்டினார்.

வழிபாட்டுத் தலங்களை அவமதிக்கும் நபர்கள் மீது அதிகாரிகள் மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவர்களுக்கு ஜாமீன் வழங்கவோ அல்லது நிலைமையைச் சிக்கலாக்கும் வேறு எந்த நடவடிக்கையையும் எடுக்கவோ வேண்டாம். 

அவர்களைச் சிறையிலேயே வைத்திருங்கள்.

இதுவே அரசாங்கத்திற்கு எனது பரிந்துரை என்று அவர் மக்களவையில் 2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset