நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆட்சேர்ப்பு முகவரா?: டிக்டாக்கில் போலி வேலை வாய்ப்புகள் குறித்து கே.டி.எம்.பி எச்சரிக்கை

கோலாலம்பூர்:

தனது பெயரைத் தவறாகப் பயன்படுத்தி போலி வேலைகளை வழங்குவதாகக் கூறும் ஒரு டிக்டாக் கணக்கின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, ஆட்சேர்ப்புப் பணிகளைக் கையாள எந்த மூன்றாம் தரப்பினரையும் நியமித்ததை கெரெட்டாபி தானா மலாயு பெர்ஹாட்- கே.டி.எம்.பி ரயில்வே நிர்வாகம் மறுத்துள்ளது.

தனது அடையாளம் தவறாகப் பயன்படுத்தப்பட்டது குறித்த விசாரணைகள் தொடர்வதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், சரிபார்க்கப்படாத வழிகள் மூலம் தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம் என்றும் கே.டி.எம்.பி அறிவுறுத்துகிறது.

மோசடி அல்லது ஆள்மாறாட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது நிறுவனம் சட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும், முறையான ஆட்சேர்ப்புத் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ ஆதாரங்களைச் சரிபார்க்குமாறு பொதுமக்களை கே டி எம் பி வலியுறுத்தி உள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset