நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய எல்லைக் கட்டுபாட்டு, பாதுகாப்பு முகமையின் தலைமை இயக்குநர் நாளை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்படவுள்ளார் 

கோலாலம்பூர்: 

மலேசிய எல்லைக் கட்டுப்பாட்டு, பாதுகாப்பு முகமையின் தலைமை இயக்குநர் ஷுஹைலி ஜைன் மிது நாளை சிப்பாங் மாஜிஸ்திரெட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவுள்ளார் 

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு காவலர்களை அவர் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

நம்பகமான ஊடகத் தகவல்களின்படி, தன்னிச்சையாகக் காயத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றவியல் சட்டப் பிரிவு 323-இன் கீழ் அவர் மீது வழக்குத் தொடரப்படவுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கேஎல்ஐஏ முனையம் 1-இல் ஷுஹைலி ஒருவரை எதிர்கொள்ளும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போலப் பரவியது.

இதற்கிடையே, அந்த வைரல் காணொளி உண்மையானதுதான் என்பதை எகேபிஎஸ் (AKPS) தரப்பும் பின்னர் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது.

தமது நற்பெயரையும் தாங்கள்சார்ந்த பாதுகாப்பு முகமையின் நற்பெயரையும் வேண்டுமென்றே கறைபடுத்தச் சில தரப்பினர் சதி செய்வதாக ஷுஹைலி இதற்கு முன்பு குற்றம் சாட்டியிருந்தார்.

இருப்பினும், நாட்டின் சட்ட விதிகளுக்குத் தான் முழுமையாகக் கட்டுப்படுவதாகவும், விசாரணைகளுக்குச் முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset