நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிவப்பு விளக்கை மீறி வந்த டிரைலர் காருடன் மோதி விபத்து: 26 வயது பெண் பலி 

மாச்சாங்:

சிவப்பு சமிஞ்கை விளக்கை மீறி டிரைலர் லாரி ஒன்று சென்று பாடாங் கெலுப்பாங்கிலிருந்து தானா மேரா நோக்கிச் சென்ற காரின் வலது பக்கத்தில் பலமாக மோதியுள்ளது.

இந்த பலத்த மோதலில் PERODUA AXIA ரகக் காரைச் செலுத்திய 26 வயதுடைய பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மாச்சாங் மாவட்ட போலீஸ் தலைவர் அசுஹார் முகமது நோர் தெரிவித்தார்.

தானா மேராவிலிருந்து மாச்சாங் நோக்கிச் சென்று கொண்டிருந்த 47 வயது உள்ளூர் நபர் ஓட்டி வந்த வோல்வோ டிரைலர் இவ்விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இருப்பினும், இந்த விபத்தில் டிரைலர் ஓட்டுநருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

இவ்விபத்து தொடர்பான தகவல்கள் ஏதேனும் தெரிந்த பொதுமக்கள் 011-10085165 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

பொதுமக்கள் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு நேரில் சென்று தகவல் அளிக்கலாம் என காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset