நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெரிகத்தான் நேஷனல் கட்சியின் பதிவை ரத்து செய்தது தேசிய சங்கங்களின் பதிவிலாகா 

புத்ராஜெயா: 

பெரிகத்தான் நேஷனல்  கூட்டணியின் பதிவை ரத்து செய்துள்ளதை தேசிய சங்கங்களின் பதிவிலாகா இன்று முறைப்படி உறுதிப்படுத்தியுள்ளது.

முன்னதாக வழங்கப்பட்ட நோட்டீஸில் குறிப்பிடப்பட்ட காரணங்களை, அக்கூட்டணி சமர்ப்பித்த விளக்கம் மறுக்கத் தவறிவிட்டதாக அத்துறை கண்டறிந்துள்ளது.

கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி PN சமர்ப்பித்த அனைத்து ஆவணங்கள் மற்றும் பிரதிநிதித்துவங்களை ஆய்வு செய்த பிறகே இமுடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சங்கம் பதிவுச் சட்டம் 1966 (சட்டம் 832)-ன் பிரிவு 13(1)(c)(iv)-இன் கீழ் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஆர்.ஓ.எஸ்.  தனது அறிக்கையில் தெரிவித்தது.

முன்னதாக, PN கூட்டணி தனது தரப்பு விளக்கத்தை அளிப்பதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

சங்கம் பதிவுச் சட்டம் 1966-ன் பிரிவு 13(2)-இன் கீழ் இந்நோட்டீஸ் விடுக்கப்பட்டதாக அவ்வமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அமைப்பின் பதிவைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதற்கு போதுமான நியாயமான காரணங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

இதன் காரணமாகவே பெரிகத்தான் நேஷனலின் பதிவு முழுமையாக ரத்து செய்யப்படுவதாக ஆர்.ஓ.எஸ்  தெரிவித்துள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset