நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பட்ஜெட் 2027: செலவுகளைக் குறைக்கவும், வருவாயை அதிகரிக்கவும் வழங்கப்படும் உதவியை கிக் பணியாளர்கள் வரவேற்கின்றனர்

கோலாலம்பூர்:

பட்ஜெட் 2027-ல், இ-ஹெய்லிங் ஓட்டுநர்கள், டெலிவரி ரைடர்கள் போன்ற கிக் பணியாளர்களின் இயக்கச் செலவுகளைக் குறைக்கவும், வருவாயை அதிகரிக்கவும் நலத்திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அரசாங்கத்தின் இந்த அரவணைப்புத் திட்டத்தை கிக் பணியாளர்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

இந்தத் திட்டம், கிக் பணியாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, வாகனப் பராமரிப்பு உதவி, காப்பீட்டுப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு அமைப்பின் (Socso) பங்களிப்புகளை வழங்குகிறது.

அரசாங்கம், கிராப் (Grab) நிறுவனத்தின் கூட்டு RM160 மில்லியன் தொகுப்பின் ஆதரவுடன், ஓய்வூதிய சேமிப்பை ஊக்குவிக்கும் நோக்கில், ஊழியர்களின் சேமநிதி (EPF) பங்களிப்புகளுக்கு ஈடான பங்களிப்புகள் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset