நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நூரிஸ்வானின் மரணத்தில் தலையிடுமாறு உள்துறை அமைச்சருக்கு ராயர் வலியுறுத்து

கோலாலம்பூர்:

போலிஸ் காவலில் இருந்தபோது நூரிஸ்வான் சூல்கிப்லியின் மரணம் தொடர்பாகத் தலையிடுமாறு ஜெலுடோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர் உள்துறை அமைச்சரை வலியுறுத்தியுள்ளார்.

மேலும், வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

போலிஸ் காவலில் நிகழ்ந்த மற்றுமொரு மரணம் இது என்றும், இதற்கு அரசாங்கத்தின் தலையீடு தேவை என்றும் ரேயர் கூறினார்.

மேலும், நூரிஸ்வானிடம் விசாரணை நடத்திய விசாரணை அதிகாரி மற்றும் சம்பந்தப்பட்ட மற்ற அனைத்துப் பணியாளர்கள், அத்துடன் விசாரணையின்போது பயன்படுத்தப்பட்ட முறைகள் ஆகியவற்றையும் காவல்துறை வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

"எனது முதல் கேள்வி: அந்த விசாரணை அதிகாரி யார்? அவர் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாரா?"

"நூரிஸ்வானிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள் யார்? காவல்துறை, குறிப்பாக கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர், இந்த விவரங்களை வெளியிட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்," என்று அவர் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

விசாரணைக்காகக் காவலில் வைக்கப்பட்டிருந்த நூரிஸ்வான், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு இறந்துவிட்டதாக அறிவிக்கப்படுவதற்கு முன்பு, எப்படி பலத்த காயங்களுக்கு உள்ளாகியிருக்க முடியும் என்றும் ராயர் கேள்வி எழுப்பினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset