செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் அரசவை கழகத்தின் நெருக்கடி: தேசிய முன்னணி சட்டமன்ற உறுப்பினர்கள் மூக்கை நுழைக்க வேண்டாம்
கோலாலம்பூர்:
நெகிரி செம்பிலான் மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து 18 பாரிசான் நேஷனல் சட்டமன்ற உறுப்பினர்களும், நீதி மற்றும் சட்டமன்ற அவை தொடர்பான காரியங்களிலோ அல்லது அரண்மனை விவகாரங்களிலோ இனி தலையிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தேசிய முன்னணி தலைவரும் துணைப்பிரதமருமான டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி கூறினார்.
சட்டப் பிரச்சினைகளையும் அரண்மனை சார்ந்த விவகாரங்களையும், மாநில அரசின் அன்றாட நிர்வாகத்திலிருந்து தனியாகப் பிரித்துப் பார்க்க வேண்டும் என்பதே தங்களின் தெளிவான நிலைப்பாடு என்று அவர் கூறினார்.
அதனால்தான், இதுபோன்ற விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று தமது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தகுந்த அறிவுரை வழங்கியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது நெகிரி செம்பிலான் மாநில அரசு, தனது 2027-ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத் தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
மாநிலத்தில் தற்போது ஆட்சிக் குழு உறுப்பினர்கள் (எக்ஸிகோ) நியமிக்கப்படாத சூழல் நிலவினாலும், பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான வரைவுப் பணிகள் தடையின்றி நடைபெற்று வருகின்றன.
மக்களின் நம்பிக்கையைப் பெற்ற இந்த அரசு, ஒரு தொங்கும் அரசாங்கமாக நின்றுவிடக் கூடாது என்பதே வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்பு என்று அம்னோ தலைவருமான சாஹித் ஹமிடி குறிப்பிட்டார்.
அரசு முகமைகளும் அதிகாரிகளும் தங்களின் சேவைகளை வழக்கம் போல் திறம்படவும், இன்னும் சிறப்பாகவும் தொடர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 19, 2026, 3:52 pm
பாடாங் பெக்கான் குனாக் பகுதியில் கைகலப்பு: பன்னிரெண்டு இளைஞர்கள் கைது
October 19, 2026, 3:45 pm
ECRL ரயில் சேவையின் கட்டணங்கள் 125 ரிங்கிட் முதல் தொடங்குகின்றன
October 19, 2026, 3:43 pm
பான் போர்னியோ நெடுஞ்சாலை ஐந்து ஆண்டுகள் தாமதம்: பொதுக் கணக்குக் குழு விசாரணையைத் தொடங்கியது
October 19, 2026, 3:41 pm
1 எம்டிபி கடன் அடைக்கப்பட்டுவிட்டது என்பதை டத்தோஶ்ரீ அன்வார் மறுக்கிறார்
October 19, 2026, 3:06 pm
டாக்டர் சித்தி ஹஸ்மாவுடன் இவ்வளவு காலம் வாழ வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றி: துன் மகாதீர் உருக்கம்
October 19, 2026, 12:47 pm
கோலாலம்பூரில் பெர்மிம் ஏற்பாட்டில் நடைபெற்ற மாபெரும் மீலாதுன் நபி மாநாடு
October 19, 2026, 12:07 pm
சிலாங்கூர் ராஜா மூடாவின் பாதுகாவலர் என போலி அடையாளம் கொண்டு மோசடி: சிலாங்கூர் அரண்மனை போலிஸ் புகார்
October 19, 2026, 11:51 am
