செய்திகள் மலேசியா
பிரான்சில் மாரா அமைப்பின் ஆதரவில் உள்ள 242 மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: அஷ்ராஃப்
புத்ராஜெயா:
நாடு முழுவதும் பரவியுள்ள கலவரங்கள், போராட்டங்களைத் தொடர்ந்து, பிரான்சில் மஜ்லிஸ் அமானா ரக்யாட் (மாரா) அமைப்பின் ஆதரவில் உள்ள 242 மாணவர்களும் பாதுகாப்பாக இருப்பதாக அதன் தலைவர் அஷ்ராஃப் வஜ்தி துசுகி தெரிவித்தார்.
கலவரங்களால் பாதிக்கப்பட்ட பொது இடங்களிலிருந்து விலகி, விழிப்புடன் இருக்குமாறும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக அஷ்ராஃப் மேலும் கூறினார்.
பிரான்சில் உள்ள மாரா அமைப்பின் ஆதரவு பெற்ற 242 மாணவர்களின் நிலை பாதுகாப்பாக உள்ளது.
அவர்கள் விழிப்புடன் இருக்குமாறும், கலவரங்கள் நடக்கும் பொது இடங்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று அவர் ஒரு முகநூல் பதிவில் கூறினார்.
செப்டம்பர் மாதம் முதல் பல ஐரோப்பிய நாடுகளில் போராட்டங்கள், கலவரங்களின் அலை பதிவாகி வந்த நிலையில் சனிக்கிழமையன்று பாரிஸ் மற்றும் இத்தாலியின் மிலன் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இது உச்சக்கட்டத்தை அடைந்தது.
மாணவர் நலப் பிரச்சினைகள், பொதுச் சேவைகளின் சீரழிவு, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு ஆகியவற்றின் மீதான கோபத்தால் இந்தப் போராட்டங்கள் தூண்டப்பட்டன.
பிரான்சில், இந்த அமைதியின்மை பல ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான நகர்ப்புற வன்முறைகளில் சிலவற்றைத் தூண்டியதாகக் கூறப்படுகிறது.
சுமார் 2,400 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஏழு பேர் படுகாயமடைந்தது உட்பட சுமார் 1,000 போலிஸ், பாதுகாப்புப் பணியாளர்கள் காயமடைந்தனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 19, 2026, 4:34 pm
நூரிஸ்வானின் மரணத்தில் தலையிடுமாறு உள்துறை அமைச்சருக்கு ராயர் வலியுறுத்து
October 19, 2026, 4:33 pm
கோத்தா கமுனிங் சட்டமன்றத் தொகுதியில் ஆறு இந்திய சமூகத் தொழில்முனைவோருக்கு ISEED வணிக உபகரண உதவி
October 19, 2026, 3:52 pm
பாடாங் பெக்கான் குனாக் பகுதியில் கைகலப்பு: பன்னிரெண்டு இளைஞர்கள் கைது
October 19, 2026, 3:45 pm
ECRL ரயில் சேவையின் கட்டணங்கள் 125 ரிங்கிட் முதல் தொடங்குகின்றன
October 19, 2026, 3:43 pm
பான் போர்னியோ நெடுஞ்சாலை ஐந்து ஆண்டுகள் தாமதம்: பொதுக் கணக்குக் குழு விசாரணையைத் தொடங்கியது
October 19, 2026, 3:41 pm
1 எம்டிபி கடன் அடைக்கப்பட்டுவிட்டது என்பதை டத்தோஶ்ரீ அன்வார் மறுக்கிறார்
October 19, 2026, 3:06 pm
