நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

1 எம்டிபி கடன் அடைக்கப்பட்டுவிட்டது என்பதை டத்தோஶ்ரீ அன்வார் மறுக்கிறார்

கோலாலம்பூர்:

1 எம்டிபி தொடர்பான அனைத்துக் கடன்களும் அடைக்கப்பட்டுவிட்டன என்ற கூற்றுகளைப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்ததோடு, நாட்டின் பெரும் கடன் சுமையை அரசாங்கம் இன்னும் நிர்வகிக்க வேண்டியுள்ளது என்றும் வலியுறுத்தினார்.

1 எம்டிபியின் அனைத்துக் கடன்களும் அடைக்கப்பட்டுவிட்டதாகக் கூறுபவர்கள் எங்கிருந்து ஆதாரங்களை எடுத்தார்கள் என்றும் அன்வர் கேள்வி எழுப்பினார்.

சிலர் 1 எம்டிபியின் கடன்கள் அடைக்கப்பட்டுவிட்டதாகக் கூறுகிறார்கள். அவர்கள் எங்கிருந்து, எந்தப் புத்தகத்தைப் படித்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

அது உண்மையல்ல என்று நிதியமைச்சின் மாதாந்திரக் கூட்டத்தில் பேசும்போது அவர் கூறினார்.

தற்போதைய பொருளாதாரத் தேவைகளை நிர்வகிப்பதோடு, பழைய கடன்களையும் வட்டியுடன் அரசாங்கம் இன்னும் செலுத்த வேண்டியிருப்பதால், மொத்த தேசியக் கடன் அதிகரிக்கக்கூடும்.

இருப்பினும், இன்றைய அரசாங்கத்தின் அதீத செலவினங்களின் சுமையை எதிர்கால சந்ததியினர் தாங்குவதைத் தடுக்க, புதிய கடன்கள் பொறுப்புடன் வழங்கப்பட வேண்டும்.

ஒரு பொறுப்பான அரசாங்கம், பொருளாதாரத்தை நிர்வகிப்பதற்கான தேவைகளுக்கு ஏற்ப மட்டுமே கடன்களை வழங்கும்.

ஆனால் அதே நேரத்தில் எப்போதும் எதிர்காலத்திற்காகத் திட்டமிடும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset