நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோத்தா கமுனிங் சட்டமன்றத் தொகுதியில் ஆறு இந்திய சமூகத் தொழில்முனைவோருக்கு ISEED வணிக உபகரண உதவி

ஷாஆலம்:

சிலாங்கூர் மாநில அரசின் ISEED பிரிவின் கீழ் முன்னெடுக்கப்படும் வணிக உபகரண உதவித் திட்டத்தின் மூலம், கோத்தா கமுனிங் சட்டமன்றத் தொகுதியில் ஆறு இந்திய சமூகத் தொழில்முனைவோருக்கு இன்று வணிக உபகரண உதவி வழங்கப்பட்டது.

இந்தத் திட்டம் தொழில்முனைவோர் தங்களது வணிகத்தை விரிவுபடுத்தவும், உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், வருமானத்தை அதிகரிக்கவும் உதவும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் உள்ளூர் சமூகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் ஆதரவளிக்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு தகுதியான பயனாளிக்கும் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் ஒப்புதலுக்கு உட்பட்டு, 10,000 ரிங்கிட் வரை மதிப்புள்ள வணிக உபகரண உதவி பெறும் வாய்ப்பு உள்ளது. 

இந்த உதவி தொழில்முனைவோர் தங்களது வணிகச் செயல்பாடுகளை மேம்படுத்தவும், சேவைகளின் தரத்தை உயர்த்தவும், புதிய வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்கவும் துணைபுரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் சிலாங்கூர் மாநில அரசு, ISEED பிரிவு மற்றும் தொகுதி அளவிலான திட்ட ஒருங்கிணைப்பாளர் கோபி ஆகியோருக்கு கோத்தா கெமுனிங் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

உள்ளூர் தொழில்முனைவோரை வலுப்படுத்துதல், பொருளாதார வாய்ப்புகளை அதிகரித்தல், தன்னிறைவு கொண்ட சமூகத்தை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களுக்கான தொடர்ச்சியான முயற்சிகளில் இந்தத் திட்டமும் ஒன்றாகும்.

இதன் மூலம்தொழில்முனைவோரை வலுப்படுத்துவோம். சமூகப் பொருளாதாரத்தை உயர்த்துவோம் என்று அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset