நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாடாங் பெக்கான் குனாக் பகுதியில் கைகலப்பு: பன்னிரெண்டு இளைஞர்கள் கைது 

குனாக்: 

பாடாங் பெக்கான் குனாக் பகுதியில்  காற்பந்து விளையாட்டின் போது கைகலப்பு சம்பவம் ஒன்று நிகழ்ந்த நிலையில் விசாரணைக்காக 12 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர் 

சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய ஒரு காணொளியை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

குனாக் நகர் விளையாட்டு மைதானத்தில் (Padang Pekan Kunak) பல இளைஞர்கள் ஒருவரோடொருவர் சண்டையிட்டுக் கொள்ளும் காட்ச, இணையத்தில் வேகமாகப் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

குனாக் மாவட்ட காவல்துறை தலைமையக அதிகாரிகள் நேற்று இரவு சுமார் 8 மணியளவில் இந்த வன்முறை காணொளியை உன்னிப்பாகக் கண்காணித்து கண்டறிந்தனர்.

விசாரணைக்கு உதவும் வகையில் நேரில் கண்ட சாட்சிகள் அனைவரும் குனாக் மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்குச் நேரில் வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்

சிறுவர்கள் சம்பந்தப்பட்ட இதுபோன்ற வன்முறைச் செயல்களைச் சகித்துக் கொள்ள முடியாது எனவும் காவல்துறை கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset