நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டாக்டர் சித்தி ஹஸ்மாவுடன் இவ்வளவு காலம் வாழ வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றி: துன் மகாதீர் உருக்கம் 

கோலாலம்பூர்:

என் துணைவி டாக்டர் சித்தி ஹஸ்மா அலியுடன் இவ்வளவு காலம் வாழ இறைவன் தனக்கு வாய்ப்பளித்ததற்காக தான் இன்னும் நன்றியுடன் இருப்பதாக துன் டாக்டர் மகாதீர் முஹம்மது கூறினார்.

ஹஸ்மாவின் மறைவினால் ஏற்பட்ட துயரம் இன்னும் நீடிப்பதாகவும், கடந்த ஓரிரு நாட்களாக அலுவலகத்திற்குத் திரும்ப முயன்ற போதிலும் தனது உடல் வலிமை இன்னும் முழுமையாக மீளவில்லை.

கடந்த ஓரிரு நாட்களாக நான் அலுவலகத்திற்குச் செல்ல முயன்று வருகிறேன், ஆனால் என் உள்ளம் இன்னும் வலுவடையவில்லை என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

தனது சுருக்கமான அறிக்கையில், அவர் அடக்கஸ்தலத்திற்கு நேரில் வந்து பிரார்த்திப்பவர்கள் அல்லது வேறு எங்கிருந்தோ ஹஸ்மாவுக்காக தொடர்ந்து வரும் பிரார்த்தனைகள் தனது இதயத்தைத் தொட்டதாக துன் மகாதீர் கூறினார்.

என் வாழ்நாளின் மிகவும் வேதனையான இழப்பைச் சந்தித்த போதிலும், பொதுமக்களின் ஆதரவிற்கும் பிரார்த்தனைகளுக்கும்   நன்றியுடன் இருக்க வேண்டும் என்பதை தனக்கு நினைவூட்டுவதாகவும் அவர் கூறினார்.

இன்னும் கொஞ்ச காலமே எஞ்சியுள்ள இந்த வயதை அடையும் வரை, இவ்வளவு காலம் ஹஸ்மாவை எனக்கு வாழ்வதற்கு வாய்ப்புக் கொடுத்த வல்ல இறைவனுக்கு தொடர்ந்து நன்றியுடன் இருக்க வேண்டும் என்பதை, இத்தகைய வேதனையான துயரத்தில் இது எனக்கு நினைவூட்டுகிறது, என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset