நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூர் ராஜா மூடாவின் பாதுகாவலர் என போலி அடையாளம் கொண்டு மோசடி: சிலாங்கூர் அரண்மனை போலிஸ் புகார் 

கிள்ளான்: 

சிலாங்கூர் ராஜா மூடாவின் பாதுகாவலர் என்று கூறி போலி அடையாளத்தைக் கொண்டு மோசடியில் ஈடுபட்ட நபர் மீது காவல் துறையில் புகார்கள் செய்யப்பட்டுள்ளன.

நிலம் மற்றும் சொகுசு கார்கள் விற்பனை பேசி சொந்த லாபம் ஈட்ட அந்த நபர் பொதுமக்களை ஏமாற்றியதாக அரண்மனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிலாங்கூர் அரண்மனை இது தொடர்பாக போலிஸ் புகார் ஒன்றை மேற்கொண்டது 

விசாரணைகள் மிகவும் நீதியாகவும், வெளிப்படையாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதில் அரண்மனை நிர்வாகம் உறுதியாக உள்ளது.

இந்த மோசடி சம்பவத்தில் சம்பந்தப்பட்ட எந்தவொரு தரப்பினரையும் பாதுகாக்கும் எண்ணம் அரண்மனைக்கு இல்லை.

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

எனவே, அரண்மனையின் பெயரைப் பயன்படுத்தி ஏதேனும் வர்த்தக பேரம் பேசப்பட்டால், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

அரண்மனைக்குத் தொடர்புடைய நபர்கள் எனக் கூறப்படும் நபர்களின் பின்னணியை பொதுமக்கள் முதலில் தீர விசாரிக்க வேண்டும்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset